கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையிலிருந்து 2,133கன அடி உபரிநீர் வெளியேற்றம்

கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையிலிருந்து 2,133கன அடி உபரிநீர் வெளியேற்றம்
X

மணிமுக்தா அணை.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணிமுக்தா அணையிலிருந்து 2,133கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடகிழக்கு பருவமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

தொடர்மழையால் கோமுகி, மணிமுக்தா ஆகிய அணைகள் நிரம்பி வழிகிறது. கல்வராயன்மலை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக மலையிலிருந்து உற்பத்தியாகும் மணி மற்றும் முக்தா ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது .இதனால் மணிமுக்தா அணைக்கு கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வினாடிக்கு 2 ஆயிரத்து133 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது .36 அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணையின் பாதுகாப்பை கருதி 34 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடிவு செய்துள்ளனர்.

தற்போது அணை நீர்மட்டம் 34 அடியை எட்டியதையடுத்து அணையில் இருந்து 2,133 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!