கள்ளக்குறிச்சி ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
X

கொள்ளையடிக்கப்பட்ட பீரோ.

கள்ளக்குறிச்சி ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி ஏ.எல்.சி சர்வ வளாக குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் வயது (46) .இவர் அதே பகுதியில் உள்ள டேனிஷ் மிஷன் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு சர்ச் வளாக குடியிருப்பில் எதிரெதிரே 2 வீடுகள் உள்ளது. இதில் தெற்கு பகுதியில் உள்ள வீட்டில் நேற்று இரவு தாய் மற்றும் மனைவி ஆகியோருடன் குடும்பத்துடன் தூங்கினார்.

நள்ளிரவு சமயம் மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் விஜய்தேவகுமார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை விஜய்தேவகுமார் எழுந்து பார்த்தபோது, வடக்கு பகுதியில் இருந்த வீட்டில் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டுக்குள் சென்று பீரோவை பார்த்தார்.

பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை, 15 பட்டுப்புடவைகள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த விஜய்தேவகுமார் இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story