பேத்தியின் குழந்தைக்கு தந்தையான தாத்தா, திகில் சம்பவம், அதிர்ச்சியில் போலீசார்

பேத்தியின் குழந்தைக்கு தந்தையான தாத்தா, திகில் சம்பவம், அதிர்ச்சியில் போலீசார்
X
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாத்தா (பைல் படம்)
பேத்தியின் குழந்தைக்கு தந்தையான தாத்தாவால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை செய்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட் டம் திருக்கோவிலூர் அடுத் துள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் கடந்த 10 வருடத்துக்கு முன் இறந்துவிட்டார்.

தந்தையும் பிரிந்து சென்றுவிட்டதால் சிறுமியும், அவரது சகோதரரும் செல்லாங் குப்பம் கிராமத்தில் உள்ள அவரது தாத்தா முனியாண்டி (70) வீட்டில் தங்கி படித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா காலம் என்பதால் சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அச்சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக கிடைத்த தகவலின் பேரில் செல்லாங்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் விமல் சம்பந்தப்பட்ட சிறுமி வீட் டுக்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது அச்சிறுமி கூறும் போது, கடந்த 3 வருடங்களாக தனது தாத்தா முனியாண்டி தன்னை கட்டாயப் படுத்தி பல முறை பலாத்காரம் செய்ததாகவும்,

இதில் கர்ப் பம் அடைந்ததால் கடந்த 30ம் தேதி பிரசவ வலி வரவே செல்லாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் மனைவி இந்திராணி (65) என்பவர் தன்னை திருக்கோவிலூர் அடுத்த மனம்பூண்டி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணியிடம் அழைத்து சென்று பிரசவம் பார்த்தார்.

அதில் தனக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், பின்னர் அது இறந்து விட்டதாகவும் தெரிவித் தார். இதையடுத்து அந்த இறந்த பெண் குழந்தையை முனியாண்டி, இந்திராணி ஆகிய 2 பேரும் ஒருபையில் போட்டு தென்பெண்ணை யாற்றில் ஓடும் தண்ணீர் போட்டுவிட்டதாக தெரி வித்தனர் என்றும் சிறுமி கூறியுள்ளார்.

இது குறித்து செல்லாங் குப்பம் கிராம நிர்வாக அலுவலர் விமல் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் முனியாண்டி இந்திராணி, ராஜாமணி ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

முனியாண்டி, இந்திராணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். செவிலியர் ராஜாமணியை தேடிவருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai in future agriculture