'காவல் உதவி' செயலியை பதிவிறக்கம் செய்து போலீசார் விழிப்புணர்வு
பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘காவல் உதவி’ செயலி குறித்து விளக்கம் அளித்த காவல் கண்காணிப்பாளர்.
தமிழக காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு அவசர காலங்களில் காவலர்களின் உதவியை நாடுவதற்கு `காவல் உதவி' எனும் புதிய செயலியை தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நமது 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு 'சுதந்திர திருநாள் அமுத பெருவிழா' என்ற நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் ஒரு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள காவல் உதவி என்ற செயலி குறித்து விளக்கம் அளித்தார்.
அவசர காலங்களில் சிவப்பு நிற `அவசரம்' என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர உதவி கிடைக்கப்பெறும் என்று விளக்கினார், பின்பு மாவட்ட ஆட்சியருடன் மேடையில் உள்ள பொதுமக்களுக்கு காவல் உதவி என்ற செயலியை பதிவிறக்கம் செய்து எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விளக்கினார்.
மேலும் காவல் கண்காணிப்பாளர் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் காவல் உதவி செயலியை பற்றி பொதுமக்களிடையே விழுப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாரதி தலைமையில் கள்ளக்குறிச்சி KVM நகை கடையில் உள்ள பணிபுரியும் பெண்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் அங்கு பணிபுரியும் பெண்களின் தொலைபேசியில் காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்யது வைக்கப்பட்டது.
இன்று இதுபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 550 மேலான நபர்களிடம் காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு விழிப்புணர்வு செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu