கள்ளக்குறிச்சியில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

சூளாங்குறிச்சி ஊராட்சியில் கட்டுமானப்பணிகள் நிறைவுற்ற இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடத்தினை ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சியில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட வேளானந்தல் கிராம ஊராட்சியில் ஊரக வளர்சித்துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் பொது சுகாதார கழிவறை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து மணலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் மற்றும் அவர்களுக்காக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

இதேபோல் ரிஷிவந்தியம் ஒன்றித்திற்குட்பட்ட சூளாங்குறிச்சி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஊரக ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் கட்டுமானப்பணிகள் நிறைவுற்ற இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடத்தினை அவர் ஆய்வு செய்தார்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்