திருக்கோவிலுார் பேரூராட்சியில் டெங்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை

திருக்கோவிலுார் பேரூராட்சியில் டெங்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை
திருக்கோவிலுார் பேரூராட்சியில் டெங்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் மழை நீர் தேங்கி டெங்கு காய்ச்சல் உருவாகும் சூழல் உள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் திருக்கோவிலுார் பேரூராட்சி செயல் அலுவலர் செல்லப்பிள்ளை, வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில், துாய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இணைந்து நகரில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள டயர்கள், தேங்காய் ஓடுகளை கண்டறிந்து அப்புறப்படுத்தினர்.

டெங்கு கொசு உற்பத்தியைத் தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

சங்கராபுரம் நகரில் உள்ள பஞ்சர் கடைகளில் சங்கராபுரம் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில் சுகாதார மேற்பார்வைாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் டெங்கு தடுப்புப் பணியாளர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது பஞ்சர் கடைகளில் சேமித்து வைத்திருந்த பழைய டயர்களை பறிமுதல் செய்து, கடைக்காரர்களிடம் டயர்களில் மழைநீர் தேங்கி ஏடீஸ் கொசுக்களால் டெங்கு பரவும் என அறிவுறுத்தி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

Tags

Next Story