பள்ளிகள் திறப்பது தொடர்பாக அரசு அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம்
பள்ளிகள் திறப்பது குறித்து கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ,மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செப்டம்பர் 1ம் தேதி பள்ளி திறப்பதற்கு உரிய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களிடம் கலெக்டர் பி.என். ஸ்ரீதர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு /அரசு உதவி பெறும்/ மெட்ரிக் /சுயநிதி /மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 50 சதவீதம் மாணவர்களுடன் 9 ,10, 11, 12 ஆம் வகுப்புகள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்கள் .
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் 244 பள்ளிகளில் தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி அனைத்து முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதார துறையின் பெயரில் பள்ளிக்கு வருகை புரியும் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் வாரம் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். மக்களைத் தேடி மருத்துவ குழு மூலம் பள்ளி மாணவர்களை தொடர்பு கொண்டு கொரானா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் .
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவர்களை பள்ளிக்கு அனுமதிக்கக் கூடாது. உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு மாணவர்கள் முககவசத்துடன் வருவதை உறுதி செய்து, உடல் வெப்பநிலை மானியை கொண்டு உடல் வெப்ப நிலையை பரிசோதித்து கிருமிநாசினி கொண்டு கையைக் கழுவிய பின் பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினி அல்லது சோப்பு போட்டு மாணவர்கள் கை கழுவுவதற்கும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கும் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.
வகுப்புகள் முடிந்தபின் வகுப்பு வாரியாக சமூக இடைவெளியை பின்பற்றி ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க தலைமை ஆசிரியர்கள் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu