கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறையில் 6 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மாவட்ட அளவில் பணியாற்ற 6 பதவிக்களுக்கான பணியிடங்களை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு ஆலோசகர் (மகளிர் மட்டும்) பணியிடங்கள் 4 உள்ளது. இதற்கு கல்வித் தகுதி முதுகலை சமூகப்பணி / சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை மற்றும் மறு வாழ்வு அளித்தல் சம்மந்தமான பணியில் 3 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான மாத ஊதியம் ரூ.15,000 வழங்கப்படும்.
2. பாதுகாவலர் (மகளிர் மட்டும்) பணியிடம் 1 உள்ளது. இப்பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்கவேண்டும். 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான மாத ஊதியம் ரூ.10,000 வழங்கப்படும்.
3. பல்நோக்கு உதவியாளர் (மகளிர் மட்டும்) பணியிடம் 1 உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்து, மைய பராமரிப்பு வேலை மற்றும் சமையல் தெரிந்திருக்க வேண்டும மற்றும் 3 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான மாத ஊதியம் ரூ.6,400 வழங்கப்படும்.
மேற்கண்ட பணிகள் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார்கள் (பகல், இரவு). இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் இவ்வறிவப்பு வெளியான தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தினுள் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu