மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர்: பயனாளிகள் நேரடித் தேர்வு

மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர்: பயனாளிகள் நேரடித் தேர்வு
X
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகுதண்டு வடம் பாதிக்கபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட, இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க தேவையான பயனாளிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தியிருந்தனர்.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகுதண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் முகாமினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், மற்றும் ஆர்த்தோ மருத்துவர்கள் முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்தனர்.இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதுகுத் தண்டு வடம் பாதிக்கபட்ட மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story