கார் விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

கார் விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை, தாய்,மகன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சௌந்தரராஜன் (45) அவரது மனைவி பிரியா (43) மகள் எஸ்வதனி (18) மகன் அபிஷேக் (16) எஸ்வதினி பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு நீட் தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று கலந்தாய்வில் நாமக்கல்லில் உள்ள மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவப் படிப்பிற்கு அட்மிஷன் போடுவதற்காக நாமக்கல் செல்லும் வழியில் இந்த விபத்து நடைபெற்றது. விபத்தில் சௌந்தரராஜன், பிரியா,அபிஷேக் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.உயிரிழந்த மூன்று பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த எஸ்வதினி மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளார் . மேலும் சம்பவம் குறித்து கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story