நாடகம் நடத்துவது தான் திமுகவின் வேலை அமைச்சர் சி.வி.சண்முகம்

நாடகம் நடத்துவது தான் திமுகவின் வேலை அமைச்சர் சி.வி.சண்முகம்
X

ஆட்சியில் இருக்கும் போது மக்கள் விரோத செயல் செய்வது,ஆட்சியில் இல்லாத போது மக்களுக்கான செயல் செய்வது என மிகப்பெரிய நாடகம் நடத்துவது தான் திமுகவின் வேலை என கள்ளக்குறிச்சியில் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சியில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரசெயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில் திமுக ஆட்சிக்கு வந்தால் திருட்டு,கொலை, கொள்ளை,பாலியல் சாதாரணமாக நடக்கும் என்றும்,திமுக அழிக்கப்பட வேண்டும் என்றால் இது தான் சரியான தேர்தல் என்றும்,இத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் திமுக அழிக்கப்படுவது உறுதி என்றார்.

மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும்,நீட் திட்டத்தையும் கொண்டு வந்தது திமுக தான் என்றும் ஆட்சியில் இருக்கும்போது மக்கள் விரோத செயல் செய்வது,ஆட்சியில் இல்லாத போது மக்களுக்கான செயல் என மிகப்பெரிய நாடகம் நடத்துவது தான் திமுக என்றும் பேசினார்.இக்கூட்டத்தில் அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர் மோகன்,கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story