அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஏப் 26ம் தேதி தீர்ப்பு

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஏப் 26ம் தேதி  தீர்ப்பு
X

பேராசிரியை நிர்மலா தேவி.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஏப் 26ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் செல்ல வழிநடத்த முயற்சித்து சிக்கிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஏப்ரல் 26 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் அந்த கல்லூரியில் படித்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. இது தொடர்பாக நிர்மலா தேவிக்கு எதிரான ஆடியோ ஆதாரமும் வெளியானது

இந்த விவகாரம் தொடர்பாக 2018ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜ் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது அருப்புக்கோட்டை நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு அப்போதைய எஸ்பி ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். பின்னர் இந்த வழக்கு மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி இறுதி கட்ட வாதங்கள் நடைபெற்றுள்ளன. இந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகும் என நீதிபதி பகவதி அம்மாள் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கை பெண் டிஐஐி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பு தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் விசாகா குழு விசாரணை நடத்த முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருக்கிறார்களா என விளக்கமளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணை நாளை மறுநாள் அதாவது 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நிர்மலா தேவி வழக்கில் வரும் 26ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிபிசிஐடி போலீஸாரிடம் நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்திருந்தார். அதில் அவர் சொன்ன விஷயங்கள் தமிழகத்தையே அதிர வைத்தது. தேவாங்கூர் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியில் இருந்த போது 2011 ஆம் ஆண்டு கணவரின் தம்பி மகனுக்கு மொட்டை அடிப்பதற்காக சங்கரன்கோவில் சென்ற போது இந்து சமய அறநிலைய அதிகாரியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறி இருந்தார்.

அது போல் 2016ஆம் ஆண்டு அந்த கல்லூரியின் முன்னாள் செயலாளருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடனும் உல்லாசமாக இருந்தாராம். அவரும் நிர்மலாவுக்கு அடிக்கடி பணம் தந்து கொண்டே இருந்தாராம். கணவருடைய நண்பர்கள் இருவருடனும் தனிமையில் இருந்ததாகவும் இதை அறிந்த கணவர், நிர்மலாவை துன்புறுத்தியுள்ளாராம். இதனால் கோபமடைந்த நிர்மலா, இந்து அறநிலையத் துறை அதிகாரியை மறுபடியும் தேடி போய் 24 நாட்கள் அவருடன் பல்வேறு வெளியூர்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துவிட்டு அருப்புக்கோட்டை திரும்பினாராம். அது போல் மற்றொரு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி, நகைக் கடை அதிபர் ஆகியோருடனுடன் நிர்மலா ஜாலியாக இருந்துள்ளார். 2016ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வந்த போது அங்கு ஒரு அதிகாரியுடன் நெருக்கமாக பழகி, அந்த கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றினார். மேலும் அருப்புக்கோட்டை எஸ்பிகே கல்லூரியில் பணிபுரிந்த உதவி பேராசிரியர் ஒருவரின் வீட்டிற்கே சென்று இரு முறை உல்லாசமாக இருந்துவிட்டு வந்தாராம். அந்த பேராசிரியர் மூலம்தான் மற்றொரு உதவி பேராசிரியர் முருகன் அறிமுகமாகியுள்ளார். அவரையும் நிர்மலா தேவி விட்டுவைக்கவில்லை, அவருடைய நண்பர் கருப்பசாமியுடன் காரில் சென்ற போது காரை நிறுத்திவிட்டு காருக்குள்ளேயே கருப்பசாமியுடன் உல்லாசமாக இருந்தாராம். இதன் பிறகு முருகன், கருப்புசாமி, நிர்மலா தேவி மூவரும் சேர்ந்து முக்கியஸ்தர்களுக்கு கல்லூரி மாணவிகளை அனுப்புவது தொடர்பாக முடிவு செய்து அது போல் ஒரு மாணவியை அணுகிய போதுதான் நிர்மலா தேவி சிக்கினார்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....