செப்டம்பர் 10 முதல் ஜியோ நெக்ஸ்ட் அறிமுகம்
கூகுள் மற்றும் ஜியோ கூட்டாக இணைந்து ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது. ஜியோ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இது அல்ட்ரா-மலிவு மற்றும் பேக்ஸ் கட்டிங்-எட்ஜ் அம்சங்கள் உள்ளன.
கூகுள் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட்போன் இருக்கும். இது விநாயகர் சதுர்த்தி அன்று செப்டம்பர் 10ஆம் தேதி முதல் சந்தையில் கிடைக்கும். 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்குவதிலும் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது
சிறப்பம்சங்கள்
சூப்பர் ஸ்மார்ட் ஃபோன்மிகக்குறைந்த விலையில், அதிரடியான ஆபர்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரவர் தாய் மொழியிலேயே ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்துவதற்கு ஏதுவாக, பெரும்பாலான இந்திய மொழிகளில் ஜியோஃபோன் நெக்ஸ்டை பயன்படுத்த முடியும் என தெரிகிறது.
மார்க்கெட்டில் வெளியாகும் லேட்டஸ் சிஸ்டம் அப்டேட்டுகளை கொண்டதாக இந்த ஃபோன் இருக்கும்.
உலக தர ஃபோன் செக்யூரிட்டி வசதிகள் இருக்கும் என்பதால், பல ஆப்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதில் சிக்கல் இருக்காது
வேகமாக இயங்கக்கூடிய அதே சமயம் தரமான க்ளாரிட்டியில் எடுக்கக்கூடிய கேமரா ஆப்ஷனை இந்த ஃபோன் கொண்டுள்ளது. இரவு நேரங்களிலும் துல்லியமாக படம் பிடிக்கும் வசதிகள் கொண்டது.
வாய்ஸ் - அசிஸ்டண்ட் வசதியை போல, இந்த ஃபோனில் 'லிசன்' பட்டன் மூலம் புதிய ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu