கிருஷ்ணகிரியில் நகைக் கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நகைக் கடை உரிமையாளரான சுரேஷ்.
கிருஷ்ணகிரியில் பிரபல தனியார் நகைக் கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் பிரபல தனியார் நகைக் கடை உரிமையாளரான சுரேஷ், கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வந்தவர்.
இவர் காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் தனது கழுத்துப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை சம்பவம் குறித்த தகவல் வியாபாரிகளிடையே பரவியதால், அங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவரது வீட்டின் முன் குவிந்துள்ளனர்.
உயிரிழந்த சுரேசுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிருஷ்ணகிரி நகரில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu