டிசம்பர் 5 ஜெயலலிதா நினைவு நாள்: எடப்பாடி தரப்பு முடிவு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில், இன்னும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள்.
ஜெயலலிதா நினைவு நாளை, டிசம்பர் 5 ஆம் தேதியே அனுசரிக்க, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக முடிவு செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எந்த தேதியில் மரணமடைந்தார் என்ற சர்ச்சை இன்னும் நீடிக்கிறது.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஆனாள் டிசம்பர் 4 ஆம் தேதியே இறந்திருக்கலாம் என சாட்சியங்கள் அடிப்படையில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருந்தது. மேலும் ஜெயலிதாவின் சகோதரர் மகன் டிசம்பர் 4 இறந்ததாக கொண்டு அவருக்கு முதலாமாண்டு திதி கொடுத்ததாகவும் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனால் ஜெயலலிதாவின் நினைவுநாள் எப்போது அனுசரிக்கப்படும் என கேள்வியெழுந்தது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, ஜெயலலிதாவின் நினைவு நாளை எப்போதும் போல் டிசம்பர் 5 ஆம் தேதியே கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது. அன்றைய தினம்,மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துவார் என அக்கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu