ஜனவரி -15 தைப்பொங்கல் திருநாள்: தமிழில் வாழ்த்து சொல்லலாம் வாங்க
Thai Thirunal Wishes in Tamil
Thai Thirunal Wishes in Tamil-உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களால் இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இடையில் இருப்பதால் பொங்கல் கொண்டாட்ட மகிழ்ச்சியில் மக்கள் உள்ளனர். தமிழர்களின் மரபில் பொங்கல் பண்டிகைக்கு என்று நீண்ட வரலாறு உண்டு.
மூத்த குடி தமிழ்
காரணம் கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்பதில் இருந்தே தமிழ் மக்களின் நீண்ட நெடிய வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் கொண்டாடும் திருவிழாவே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் என்ற சொல்லுக்கு கொதித்தல், மிகுதல், சமைத்தல், மற்றும் செழித்தல் என்ற பல பொருள் உண்டு.
தைப்பொங்கல் திருநாள்
தை முதல் நாள் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இது தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் ஒரு உன்னத திருநாள். இது வேளாண்மையை அடிப்படையாக கொண்ட விவசாய திருநாள். இந்நாளில் தமிழர்களின் இறைவனான சூரியனுக்கு நன்றி செலுத்துவர்.
சூரிய நாட்காட்டி
தைப்பொங்கல் திருவிழா உலகில் உள்ள அனைத்து தமிழர்களாலும் சூரிய நாட்காட்டியின் படி, தை மாதத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக தமிழர்கள் சூரிய நாட்காட்டியவே தங்கள் நாட்காட்டியாக கடைபிடித்து வருகிறார்கள். அதன்படி சூரியன் மகர ராசியில் நுழையும்போது சூரியனின் ஆறு மாத நீண்ட பயணத்தின் தொடக்கத்தை இந்த பொங்கல் திருவிழா குறிக்கிறது.
இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா, மேலும் புதுச்சேரி, இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா போன்ற பல நாடுகளிலும் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது.
ஆற்று ஓரப் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் வருடத்தில் மூன்று முறை அறுவடை செய்வார்கள், ஆனால் மானாவாரி இடங்களில் மழை பெய்யும் காலங்களில் மட்டுமே விவசாயம் செய்வார்கள். அந்த வகையான நிலங்களில் வருடத்தில் ஆடி மாதத்தில் விதை விதைத்து மார்கழி மாதத்தில் அறுவடை செய்வார்கள். அவ்வாறு அறுவடை செய்த தானியங்களை வைத்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து பூஜை செய்வர்.
நான்கு நாள் விழா
உழவர் திருநாள் என்று போற்றப்படும் இந்த பொங்கல் பண்டிகைகள் தமிழகத்தில் மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல் நாள் போகி பொங்கல், தை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு தினங்கள் கொண்டாடப்படுகிறது.
சோழர் கால கல்வெட்டுக்கள்
பொங்கல் பண்டிகையின் வரலாறு பற்றிய தகவல்கள் அதிகமாக சோழர் காலத்தைச் சேர்ந்தவைகளாக இருக்கின்றன. இதனை பல்வேறு கல்வெட்டுகளின் மூலம் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளனர். இந்தக் கல்வெட்டுகளில் பொங்கல் உணவை சமைப்பதற்கு உண்டான குறிப்புகள் தெளிவாக அப்பொழுதே பொறிக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையை தை பொங்கல், உழவர் திருநாள், தமிழர் திருநாள், அறுவடை திருநாள், தை திருநாள் என்று பல பெயர்களில் நாம் அழைக்கிறோம்.
போகிப்பொங்கல்
பொங்கல் தினத்தன்று புதுப் பானை வாங்கி, புது பச்சரிசியில் பொங்கல் வைப்பர். பொங்கல் பானை பொங்கி வழிவது போல இல்லத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் பொங்கி வழியவேண்டும் என்று இறைவனை வேண்டுவர். அதற்கு முன்பாக மார்கழி மாதத்தின் கடைசி தினத்தன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழித்து புதியன புகுதலே போகி. போகி பண்டிகை அன்று வீடுகளை சுத்தம் செய்து குப்பைகள் மற்றும் பயனற்ற பொருட்கள் அனைத்தையும் தீயில் இட்டு கொளுத்துவர். பழைய பொருட்களை நீக்கினால், புதிய பொருட்கள் சேரும் என்பது நம்பிக்கை. போகி பண்டிகை அன்று வேப்பிலை, பூளைப்பூ, மற்றும் ஆவாரம்பூ சேர்த்து காப்பு கட்டும் வழக்கம் உள்ளது. நம் முன்னோர்கள் கடந்த ஆண்டிற்க்கு நன்றி செலுத்தும் விதமாகவும், புது ஆண்டை வரவேற்கும் விதமாகவும் இந்த போகி பண்டிகை கொண்டாடினர். போக்கி என்பது மருவி போகி என்றாகிவிட்டது.
மாட்டுப் பொங்கல்
பொங்கலுக்கு மறுநாள் உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்று மாடுகளை குளிக்க வைத்து, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அவற்றை அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபடுவர். விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் ஒரே இனம் அது தமிழர் இனம் தான். மட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு அல்லது மஞ்சு விரட்டு என்று சொல்லக்கூடிய ஏறு தழுவும் விழா நடக்கும்.
காணும் பொங்கல்
பொங்கல் விழாவின் நான்காவது நாள் காணும் பொங்கல் அல்லது கன்னிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் பெண்களுக்கு மிக முக்கியமான நாளாகும். அன்று பொங்கல் அன்று வைத்த மஞ்சள் கொத்தை வீட்டு பெரியவர் பெண்களிடம் கொடுப்பர். அவர்கள் ஆசீர்வாதம் பெற்று வாங்கி அந்த மஞ்சளை அரைத்து முகத்திலும், பாதத்திலும் பூசிக் கொள்வர்.
ஜல்லிக்கட்டு
காணும் பொங்கல் அன்று உறவினர்களை சந்தித்து ஆசீர்வாதம் வாங்குவதும் தொன்றுத் தொட்டு வரும் பழக்கங்களில் ஒன்றாகும். அதுமட்டுமல்லாது ஜல்லிக்கட்டு, உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற பல வீர விளையாட்டுகளும் நடைபெறும்.
வாழ்த்து செய்திகள்
இந்த மகிழ்ச்சியான நாளில் , உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிக்க தமிழில் ஏராளமான வார்த்தைகள், வாக்கியங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இன்றே அனுப்ப தொடங்குவதற்காக இங்கே பதிவிட்டு உள்ளோம்.
தமிழில் வாழ்த்து செய்திகள் எப்படி உள்ளன என்பதை இனி பார்ப்போமா?
*அட்வான்ஸ் தமிழர் திருநாளாம் போகி பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.
*இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
*இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
*பொங்கலோ... பொங்கல்... அட்வான்ஸ் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*அட்வான்ஸ் ஹேப்பி பொங்கல்.
*உலகத் தமிழர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
*அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
*அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
*தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*தைப்பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
*தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
*இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*பொங்கலோ பொங்கல் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
கவிதை நடையில் வாழ்த்துக்கள்
*தித்திக்கும் தமிழ் போல பொங்கட்டும் உங்களது புதுப்பானை, பொங்கல் போல பிறக்கட்டும் புது வாழ்வு, திகட்டாத கரும்பு போல இனிக்கட்டும் மனிதனின் மனது.
*நோயற்ற சுகத்தைப் பெற்று, மாசற்ற செல்வத்தை பெற்று, அன்புடைய சுற்றத்தை பெற்று, இதயத்தில் இன்பத்தை பெற்று, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் பொங்கல் திருநாளை.
*இன்பம் பொங்கி வழியட்டும் இல்லங்களிலும், உங்கள் உள்ளங்களிலும்... இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
*புது நெல்லை அறுத்து வந்து, பொதிந்திருக்கும் உமியகற்றி, புத்தரிசி முத்தெடுத்து, பொங்கலிடம் வேளையிலே பொங்கலோ பொங்கல் என பாவையரும் குலவையிட, பொங்கி வரும் பொங்கலை போல் பொங்கட்டும் மகிழ்ச்சியெங்கும். பொங்கல் வாழ்த்துக்கள்.
*பொங்கல் போல் புன்னகை பொங்கட்டும், மக்கள் மனசெல்லாம் மகிழ்ச்சி மலரட்டும், உள்ளம் எல்லாம் உற்சாகம் பரவட்டும்.
*அனைவர் இல்லத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் பொங்க, இறைவனை வணங்குவோம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*மங்கலம் பொங்கட்டும், மனக்கவலை தீரட்டும், புதுப் பானை அரிசி போல புது வாழ்வு மலரட்டும், பொங்குகின்ற பொங்கல் போல மகிழ்ச்சி பொங்கட்டும், செங்கரும்பு சுவை போல உழவர் மனம் மகிழட்டும், மங்காத நல்வாழ்வு யாவருக்கும் கிடைக்கட்டும். இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
*தமிழர் திருநாளாம், தைப்பொங்கல் திருநாளாம், பொங்கி வரும் பொங்கல் மகிழ்ச்சி. பொங்கல் வாழ்த்துக்கள்.
மாட்டுப்பொங்கல் வாழ்த்து
*இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*விவசாயத்தின் தோழனாய், உழவனின் தொண்டனாய், வீரத்தின் அடையாளமாய் விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்துவோம். இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்.
இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்... உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லும் நாள்.
*அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*வீரத்தமிழருக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.
*ஜல்லிக்கட்டு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
காணும் பொங்கல்
*காணும் பொங்கல் வாழ்த்துக்கள்.
*உறவுகள் ஒன்று சேரும் காணும் பொங்கல் வாழ்த்துக்கள்.
*நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சந்தித்து மகிழ்ந்திட இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்.
*அனைவருக்கும் இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்.
*நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் காணும் பொங்கல் வாழ்த்துக்கள்.
*அனைவருக்கும் காணும் பொங்கல் வாழ்த்துக்கள்.
*நண்பர்களை நேசிக்கவும், உறவுகளைப் போற்றவும், பெரியோரை வணங்கவும், தமிழர்கள் உருவாக்கிய தனிப்பெரும் பண்டிகை காணும் பொங்கல். இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- happy pongal wishes in tamil 2023
- thai thirunal wishes in tamil
- tamilar thirunal wishes in tamil
- thai pongal wishes in tamil
- advance pongal wishes in tamil
- kaanum pongal wishes in tamil
- happy pongal in tamil wishes
- pogi pandigai wishes in tamil
- bhogi pongal wishes in tamil
- thai thirunal
- thai thirunal in tamil
- pongal thirunal
- thai thirunal valthukkal in tamil
- happy pongal in tamil
- pongal vazhthu in tamil
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu