அரசியல் அல்ல ஆன்மீக விழா தான்: நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த சர்ட்டிபிகேட்

நடிகர் ரஜினிகாந்த்.
அயோத்தியில் ராமர் கோவிலை திறந்து இருப்பதன் மூலம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம், ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்ற இரண்டு வாக்குறுதிகள் மிக முக்கியமானவை. இந்த இரண்டையும் தற்போது நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது மோடி தலைமையிலான மத்தியில் உள்ள பாஜக அரசு.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களின் 500 ஆண்டு கால கனவு ராமர் பிறந்த இடத்தில் முகலாய மன்னர்களின் ஆட்சி காலத்தில் பாபர் மசூதியை வைத்ததால் தான் பிரச்சனை வளர்ந்தது. அதற்கு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விடை கிடைத்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தான் தற்போது ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை பிரதமர் மோடியே தலைமை ஏற்று நடத்தி முடித்து வைத்துள்ளார். இதற்காக அவர் 11 நாட்கள் விரதம் இருந்து நாடு முழுவதும் ராமருக்கு தொடர்புடைய கோவில்களுக்கு சுற்றுப்பயணம் சென்று தேசத்திற்காக சங்கல்பம் செய்து தனது லட்சியத்தை நிறைவேற்றி முடித்து உள்ளார்.
பொதுவாக நமது நாட்டில் ஆளுங்கட்சி என்ன செய்தாலும் அதற்கு எதிர் கருத்து கூறுவது தான் எதிர்க்கட்சிகளின் லாஜிக்காக இருந்து வருகிறது. அந்த வகையில் தான் ஆன்மீகம் தொடர்புடைய இந்த ராமர் கோவில் விஷயத்தையும் அரசியலாகி விட்டார்கள் காங்கிரஸ் கட்சியினர். அரசியலுக்காக தான் மோடி இந்த விழாவை நடத்துவதால் நாங்கள் அதில் கலந்து கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவித்தார். அது மட்டுமல்ல கட்டி முடிக்கப்படாமல் உள்ள ராமர் கோவில் தேர்தலை முன்னிட்டு அவசரம் அவசரமாக திறக்கப்படுகிறது என்றும் அரசியல் வசனம் பேசினார்கள்.
பெரும்பாலான இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ராமர் கோவிலுக்கு எதிராக கருத்துக்கள் கூறவில்லை என்றாலும் பாராட்டி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களது மௌனமும் ராமர் கோவிலுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை தான் காட்டியுள்ளது. இந்த நிலையில் தான் ராமர் கோவில் கும்பாபிஷேகம் உலக நாடுகள் வியக்கும் வண்ணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்த விழாவில் தமிழக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு விட்டு திரும்பி வந்து உள்ளார். அவர் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் ராமர் கோவில் திறப்பு அரசியல் விழா அல்ல ஆன்மீக விழா என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.
ராமர் கோவில் பற்றி தமிழகத்தில் தி.மு.க. தொடங்கி அனைத்து அரசியல் கட்சிகளும் வெறுப்புணர்வை உமிழ்ந்து வரும் நிலையில் தைரியமாக தனது கருத்தை எடுத்து வைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்று பேசப்பட்டு வருகிறார். மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் அந்த உள்ளுணர்வை எதற்கும் பயப்படாமல் வெளியிட்டு இருப்பது பாராட்டுக்குரியது.
ரஜினி என்ன கூறியிருக்கிறார் என இனி பார்ப்போமா?
ராமர் கோயில் திறப்பு என்பது என்னைப் பொறுத்தவரை அரசியல் நிகழ்வு அல்ல, ஆன்மீக நிகழ்வு. ராமர் கோயில் திறந்தவுடன் நேரில் பார்த்த முதல் 150 பேரில் நானும் ஒருவன், உண்மையில் எனக்கு பெரிய சந்தோஷம். இந்த விவாகாரத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். எல்லாருடைய பார்வையும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை” என்று ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu