நடிகர் பிரசாந்துக்கு ஒரு நீதி செல்வ பெருந்தகைக்கு ஒரு நீதியா? மக்கள் கேள்வி
காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை.
நசென்னை தி.நகர் சாலையில் நடிகர் பிரசாந்த் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பைக் ஓட்டியபடியே பேட்டியளித்தார். இருப்பினும், அப்போது அவர் ஹெல்மெட்அணியவில்லை.. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், பாண்டி பஜார் போக்குவரத்து காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகர் பிரசாந்துக்கு ரூ.2000 அபராதம் விதித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் பிரசாந்த்.ஜீன்ஸ், லண்டன், வின்னர் என இவர் பல வெற்றிப் படங்களை நடித்து கொடுத்தவர்.
இப்போது அவர் அந்தகன் என்ற படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா, தபு நடித்து சூப்பர் ஹிட்டான அந்தாதூன் படத்தின் ரீமேக் தான் இது. இதில் பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ஊர்வசி எனப் பலரும் நடித்துள்ளனர். நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்த இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அன்றைய தினம் பல படங்கள் வெளியாவதால் ஒரு வாரம் முன்னதாகவே அந்தகன் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக டாப் ஸ்டார் பிரசாந்த் இப்போது அந்தகன் பட புரமோஷனில் பிஸியாகி இருக்கிறார். இதற்காக அவர் பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார்.
அதன்படி அவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
முதலில் கார் ஓட்டியபடி பேட்டி அளித்த அவர், அடுத்ததாக புல்லட் ஓட்டிக் கொண்டே பேட்டி ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில் சிறு வயதில் தான் பைக் ஓட்ட ஆசைப்பட்டதாகவும் இதற்காகச் சிறு வயதில் ஆர்எக்ஸ் 100 பைக் வாங்கிக் கொடுத்தார் என்றும் கூறியிருந்தார். தான் 4 நாட்களில் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டதாகத் தெரிவித்த அவர், இருப்பினும் அந்த பைக்கை தந்தை உடனடியாக விற்று விற்றார் என்றும் தனது நினைவுகளைப் பகிர்ந்திருந்தார்.
இந்த பேட்டி தான் இப்போது அவருக்குச் சிக்கல்.. அதாவது நமது நாட்டில் உள்ள போக்குவரத்து சட்டப்படி டூவீலர் ஓட்டும் அனைவரும் நிச்சயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதியாகும். ஆனால், பிரசாந்த் எந்தவொரு ஹெல்மெட்டும் அணியாமல் டூவீலரை ஓட்டி இருந்தார். சினிமாவில் முக்கிய ஹீரோவாக இருக்கும் ஒருவர் இதுபோல ஹெல்மெட் அணியாமல் ஓட்டுவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று பலரும் விமர்சித்தனர். நடிகர் பிரசாந்தின் இந்த செயலை இணையத்தில் பலரும் கண்டித்துள்ளார். முன்னணி ஹீரோவாக இருக்கும் ஒருவர் இதுபோல செய்வது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் எனப் பலரும் சாடினர். மேலும், நடிகர் பிரசாந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கூறினர். இதற்கிடையே போக்குவரத்து போலீசார் இப்போது நடிகர் பிரசாந்த் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அபராதம்: ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகர் பிரசாந்துக்கு ரூ.2000 அபராதம் விதித்துள்ளனர். சென்னை தி.நகர் சாலையில் ஹெல்மெட் இல்லாமல் புல்லட்டை ஓட்டியதற்காக பாண்டி பஜார் போக்குவரத்து காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நெட்டிசன்கள் கேள்வி: அதேநேரம் இன்னும் சிலர் தென்காசியில் கடந்த ஜூலை 23ம் தேதி நடந்த காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற செல்வபெருந்தகை பைக்கில் சென்ற போது அவர் ஹெல்மெட் அணியவில்லை. நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் போடவில்லை என்று அபராதம் விதித்த போலீசார், ஏன் செல்வபெருந்தகைக்கு அபராதம் விதிக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu