ஐயப்ப பக்தர்களுக்கு 41 நாட்கள் விரதம் போதுமானதா? முழுவிபரம்
X
சபரி மலை ஐயப்பன் கோவில்.
By - C.Elumalai, Sub -Editor |11 Dec 2021 11:07 AM IST
மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள் பிரம்மச்சரியம், வாபர் வழிபாடு போன்ற தகவல்களை தெரிந்து கொள்வோம்.
கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலை ஐயப்பனை காண பக்தர்கள் செல்கின்றனர். அவ்வாறு மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள் பிரம்மச்சரியம் கட்டாயம் 60 நாள், வாபர் வழிபாடு, ஆழித்தீயில் போடப்படும் நெய் தேங்காய் யாருக்குரியது போன்ற தகவல்களை தெரிந்து கொள்வோம்.
பிரம்மச்சரியம் கட்டாயம் 60 நாள் :
- சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் திறக்கப்படும் நாள் முதல் 60 நாட்கள் கழித்து மகரவிளக்கு பூஜை நடக்கும். ஜனவரி 14ம் தேதி அன்று மகரவிளக்கு கொண்டாடப்படும். இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதமிருந்து உணவை குறைத்து, ஐயப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும்.
- பக்தர்கள் 41 நாட்களிலும் விரதத்தை முடிக்கலாம். மண்டல பூஜைக்கு செல்பவர்களுக்கு 41 நாட்கள் விரதம் போதுமானது. ஆனால் கோவிலுக்கு சென்று திரும்பிய பிறகும் ஜனவரி 14ம் தேதி வரை பிரம்மச்சார்ய விரதத்தையும், பிற கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்பதன் மூலம் ஐயப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.
வாபர் வழிபாடு :
- ஐயப்பன் கோவில் 18ம் படிக்கு கீழாக கிழக்கு பக்கத்தில் வாபரை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். இங்கே ஒரு இஸ்லாமியர் பூஜை வழிபாடுகளை செய்வார். வாபருக்கு நெல், நல்ல மிளகு, சந்தனம், சாம்பிராணி, பன்னீர், நெய், தேங்காய் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தலாம்.
- ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைபிடிக்கும் ஐயப்ப பக்தர்கள், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
ஆழித்தீயில் போடப்படும் நெய் தேங்காய் யாருக்குரியது :
- சபரிமலையில் பதினெட்டாம்படியின் கீழே ஒரு புறத்தில் எரியும் ஆழித்தீயில் போடப்படும் நெய் தேங்காய் ஐயப்பனுக்கு உரியது என பலரும் கருதுகின்றனர். உண்மையில், இது ஐயப்பன் சன்னதியின் இடதுபுறமுள்ள கன்னிமேல் கணபதிக்கு உரிய வழிபாடாகும்.
- சபரிமலை கோவிலில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஏற்றுதல், பாயசம் வைத்தல், வெள்ளை நைவேத்தியம், திரிமதுரம், பஞ்சாமிர்தம், அப்பம், எள் உருண்டை, பழம், பானகம், இளநீர், நெய்விளக்கு, புஷ்பாஞ்சலி, சந்தனம் சாற்றுதல் ஆகியவை முக்கிய வழிபாடுகளாக உள்ளன. இவற்றில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஆகியவை தினமும் செய்யப்படும் வழிபாடுகளாகும்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu