காவல் நிலையங்களில் அமலுக்கு வரும் டிஜிட்டலில் விழித்திரை, விரல் ரேகை பதிவு
காட்சி படம்
குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்க, தமிழக காவல் நிலையங்களில், சந்தேக நபர்களின் விழித்திரை, விரல் ரேகையை 'டிஜிட்டல்' முறையில் பதிவு செய்யும் நடைமுறை குறித்து சோதனை முயற்சி நடக்கிறது.
நாடு முழுதும் குற்றங்களை கட்டுப்படுத்த, மத்திய அரசு நிதி உதவியுடன், 'சி.சி.டி.என்.எஸ்.,' எனப்படும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் செயல்படுகிறது. இதில், 14,000 காவல் நிலையங்கள் மற்றும் காவல் துறை சார்ந்த, 6,000 அலுவலகங்கள் இணைக்கப் பட்டுள்ளன.
இதில், தமிழகத்தில் உள்ள, 1,482 காவல் நிலையங்கள் மற்றும் காவல் துறை சார்ந்த, 479 அலுவலகங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.
காவல் நிலையங்கள் மற்றும் துறை சார்ந்த வழக்கு விபரம், கைது எண்ணிக்கை குறித்த தகவல்கள், 'சி.சி.டி.என்.எஸ்.,' வலைப் பின்னலில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை, காவல் நிலையங்களில் குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்கள் குறித்த விரல் ரேகை பதிவு காகிதம் வாயிலாகத் தான் கையாளப்படுகிறது.
இனி, டிஜிட்டல் முறையில், விரல் ரேகை மற்றும் வழித்திரை பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது. அதற்கான சோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
காவல் நிலையங்கள் தோறும், குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்கள் குறித்த விழித்திரை மற்றும் விரல் ரேகை பதிவுகளை, 'சி.சி.டி.என்.ஸ்.,' வலைப்பின்னலில் பதிவேற்றம் செய்துவிட்டால் நாட்டில் உள்ள எல்லா காவல் நிலையங்களிலும் தெரிந்து கொள்ள இயலும்.
இதன் வாயிலாக குற்றவாளிகள் குறித்து எளிதில் துப்பு துலக்கி விடலாம். இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது. அதற்கான சோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu