புழல் சிறைவாசிகளுக்கு புதிய வசதிகள், பயிற்சி அறிமுகம்
புழல் சிறை (பைல் படம்)
சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக அம்ரீஸ் பூஜாரி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு புதிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் வருமாறு: புழல் சிறையில் நேர்காணல் செய்திடும் அறையில் சிறைவாசிகளிடம் உறவினர்கள் பேசுவதற்கு இன்டர்காம் வசதி அமைக்கப்பட்டது. சிறை பாதுகாப்பினை மேம்படுத்திட 5 நவீன கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் ஏ.சி., வெல்டிங் மெஷின், ஹோம் அப்ளையன்சஸ் 3 மாத கால பயிற்சி ஆண் சிறைவாசிகளுக்கு அளிக்கப்பட்டது. டெய்லரிங் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி முடித்த பெண் சிறைவாசிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஊடுகதிர் அலகிடும் எந்திரம் ரூ.180 லட்சம் செலவில் கொள்முதல் செய்து நிறுவப்பட்டு இயங்கி வருகிறது. ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி முடித்த 20 சிறைவாசிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறைவாசிகளுக்கு தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் மூலமாக வாய்ப்பாட்டு பயிற்சி மற்றும் இதர இசை கருவிகள் வாசிப்பு பயிற்சி தொடங்கப்பட்டது. கனரக தொழில்கூட சலவை எந்திரம் சிறைவாசிகளின் பயன்பாட்டிற்கென வாங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறைவாசிகளால் உருவாக்கப்பட்ட மூலிகை நர்சரியும் தொடங்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu