ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் மயில் பேட்டி
தென்காசி அருகே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பினரின் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செங்கோட்டை சங்க கிளை துவக்க விழா ஆய்க்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் மணிமேகலை, மாநிலத் துணைத் தலைவர் சேவியர், மாநில பொதுச் செயலாளர் மயில் உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சங்கத்தில் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் மயில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :
தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதை அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பினர் வரவேற்கிறோம்.
மேலும் மாணவர்களின் கற்றல் இழப்பையும், இடைவெளியையும் போக்க ஆசிரியர்கள் தயாராக இருக்கிறோம். அதே வேளையில் நாளை முதலே இல்லம் தேடி கல்வி திட்டத்தை 12 மாவட்டங்களில் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டம் ஒன்றிய அரசின் தேசிய கல்வி கொள்கையின் வடிவமாக இருக்குமோ என்ற ஐயப்பாடு ஆசிரியர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
அதனை தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிலும் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தில் மீண்டும் 5 முதல் 7 மணி வரை வகுப்பு நடத்துவது மாணவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். இந்த திட்டத்தை சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் செயல்படுத்த அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வ பணியாளர்களுக்கான ஊதியத்தை ஆயிரத்திலிருந்து 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். 1 முதல் 5 - ஆம் வகுப்பு ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிற்சியளிக்கும் ஆசிரியர்கள் B.Ed கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu