இணையதள சேவை பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
காட்சி படம்
சென்னை விமான நிலையத்தில் அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதளம் இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர் . துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி, லண்டன் உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட 12 உள்நாட்டு விமானங்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 9 விமானங்கள் தாமதமாக புறப்பட்டது. இதன்காரணமாக பாங்காக், கொழும்பு, துபாய், பாரிஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பயணிகளின் பயண அட்டை, உடமைகள் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், இணையதள சேவை பாதிக்கப்பட்டதால் போர்டிங் பாஸ்கள் வழங்க முடியவில்லை. எனினும் கூடுதலான அலுவலர்களை வைத்து முடிந்த அளவு வேகமாக கைகளால் எழுதி பாஸ்கள் வழங்கபட்டன. எனினும் தாமதம் ஏற்பட்டது. தற்போது பிரச்சனை சரிசெய்யப்பட்டு நிலைமை சீரானது என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu