சர்வதேச பின்னலாடை கண்காட்சி; திருப்பூரில் துவக்கம்

சர்வதேச பின்னலாடை கண்காட்சி; திருப்பூரில் துவக்கம்
X

திருப்பூரில் சர்வதேச பின்னலாடை கண்காட்சியை, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்து, ஸ்டால்களை பார்வையிட்டார்.

Tirupur News Today Tamil -திருப்பூர் அருகே 66 ஸ்டால்களுடன் சர்வதேச பின்னலாடை கண்காட்சி நேற்று துவங்கியது. இன்றும், நாளையும் நடக்கும் கண்காட்சி, நாளை (வெள்ளிக்கிழமை) மாலையுடன் நிறைவடைகிறது.

Tirupur News Today Tamil -ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) சார்பில், சர்வதேச அளவிலான 48-வது பின்னலாடை கண்காட்சி, திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் நேற்று துவங்கியது. இந்த கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 66 பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஸ்டால்களை அமைத்துள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கனடா, ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 200-க்கும் அதிகமான வர்த்தக ஏஜன்ஸிகள் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். இந்த முறை கண்காட்சியில் டெல்லி பையிங் அசோசியேசன், திருப்பூர் பையிங் அசோசியசேன் இணைந்து நடத்துவதால், அதிக எண்ணிக்கையில் பையர்கள், பையிங் ஏஜென்சிகள் வருகை தந்துள்ளனர்.


இந்த கண்காட்சியின் துவக்க விழா நேற்று காலை நடந்தது. செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ.சாமிநாதன் கண்காட்சியை துவங்கி வைத்தார். இந்தியா நிட் பேர் சங்கத்தின் தலைவர் மற்றும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பையிங் ஏஜெண்ட் சங்க தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஸ்டால்களை அமைச்சர் சாமிநாதன், பியோ தலைவர் சக்திவேல் உள்ளிட்டோர் பார்வையிட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்த ஆடைகளின் விவரங்களை கேட்டறிந்தனர். வெளிமாநிலங்களில் இருந்து உற்பத்தியாளர்கள் ஸ்டால் அமைத்திருந்தனர். அதுபோல் வெளிநாடுகளில் முக்கிய பிராண்டட் நிறுவனங்களின் பையர்களும் வந்து ஸ்டால்களை பார்வையிட்டனர். இந்த பின்னலாடை கண்காட்சி நாளை மாலை வரை நடக்கிறது.

கொரோனா காலத்துக்கு பிறகு, திருப்பூரில் இந்த கண்காட்சி நடப்பதால் அதிகப்படியான பையர்கள் வருகை தர உள்ளதாக, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். திருப்பூரில் உற்பத்தியாகும் நவீன ஆடைகள், குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கான ஆடைகள், விளையாட்டு ஆடைகள், உள்ளாடைகள் உள்ளிட்ட ஆடைகள் ஸ்டால்களில் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

உலகளவில் பின்னலாடை துறையில் சிறந்து விளங்கும் திருப்பூரில், இதுபோன்ற சர்வதேச பின்னலாடை கண்காட்சிகளை நடத்துவதால், பிறநாடுகளை சேர்ந்த தொழில் முனைவோர், பையர்கள் வந்து ஸ்டால்களை பார்வையிடுவதால், ஆர்டர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது. அத்துடன், பிற மாநிலங்களை சேர்ந்த பனியன் உற்பத்தியாளர்களின் ஸ்டால்களும் இடம்பெற்றிருப்பதால், அவர்களின் உற்பத்தி செய்த பின்னலாடை ரகங்களை சந்தைப்படுத்தவும், இது மிகச்சிறந்த வாய்ப்பாக அமைகிறது. தொழில்துறை நடத்தும் இதுபோன்ற கண்காட்சிகளால், தொழில்வாய்ப்பு பெருகி, ஆண்டுமுழுவதும் தொழிலாளர்கள், பணிவாய்ப்பை பெறுகின்றனர்.


கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோன்ற சர்வதேச பின்னலாடை கண்காட்சியை நடத்துவதில், தொழில் துறைக்கு சிக்கல் ஏற்பட்டு, நடத்த முடியவில்லை. தற்போது, கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டதால், பின்னலாடை துறை பழையபடி வேகமெடுத்து வருவது தொழில்துறை மத்தியில் பலத்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!