பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டத்தை தொடரும் ஆசிரியர்கள்

பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டத்தை தொடரும் ஆசிரியர்கள்
X
அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இடைநிலை ஆசிரியர்கள் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கின்றனர்

கடந்த 2009-ம் ஆண்டுக்கு பின்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு இருப்பதாகவும், அதனை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27-ம் தேதி முதல் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

4-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 140-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் தொடக்கக் கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் ஆகியோர் ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 30 நிமிடம் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் எங்கள் போராட்டம் தொடரும். முதலமைச்சரை சந்திக்கும்வரை போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.

என்றும், முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதால், 5வது நாளாக ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!