/* */

ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் : சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரசெயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்

HIGHLIGHTS

ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் : சுகாதார செயலாளர்  ராதாகிருஷ்ணன்
X

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 36 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள், ஊழியர்கள் என மொத்தம் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் அலுவலகங்கள் ,கல்வி நிறுவனங்களில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக பின்பற்ற உறுதி செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

வடமாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் மக்கள், அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .

மாவட்ட அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை விகிதத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவையான மருத்துவ கட்டமைப்புகளை தயார் செய்து வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Updated On: 24 April 2022 4:39 PM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  2. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  3. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  4. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  7. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்