சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா: பட்ஜெட்டில் அறிவிப்பு

சேலத்தில் ரூ850 கோடி செலவு 119 ஏக்கர் நிலப்பரப்பில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்

HIGHLIGHTS

சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா: பட்ஜெட்டில் அறிவிப்பு
X

சேலம் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஜவுளித் தொழிலில் முக்கிய பங்களித்து வருகிறது. சேலம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது செயல் வடிவம் பெற்றுள்ளது. அதில் முதல் கட்டமாக ஜவுளி பூங்கா அழைப்பதற்கான நிலத்தைத் தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் முழு கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் பருத்தி நூல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்றைய தினம் நூலின் விலை கிலோவிற்கு ரூபாய் 40 உயர்ந்துள்ளது. இதனால் உயர்ந்த ஆடைகள் துணி என பருத்தி நூலை மூலப் பொருளாக கொண்டு உள்ள அனைத்து உற்பத்தி நிலையங்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

குறிப்பாக சேலம், திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி கூடங்கள் முடங்கியுள்ளன. ஒரு காண்டி பருத்தி பஞ்சு விலை ஒரு லட்ச ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தஞ்சை கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் ஜவுளி தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு விலைக்கு ஏற்ப நூல் விலையும் உயர்ந்து வருகிறது. இதனிடையே பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று பஞ்சு மீதான 11 சதவீதம் இறக்குமதி வரியை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்துள்ளது. மேலும் தமிழகத்திலிருந்து ஓர் ஆண்டிற்கு 3 ஆயிரம் கோடி டாலர் ஜவுளி ஏற்றுமதி நடந்து கொண்டிருக்கிறது. இதனை 2030 ஆம் ஆண்டிற்குள் 10,000 கோடி டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

இந்திய துணி உற்பத்தி தொழில் வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாட்டில் இழந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக சேலத்தில் தயாரிக்கும் சாயம் இடப்பட்ட நூல் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இங்க இருந்து வங்கதேசம், இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இத்தகைய தொழிலை மேலும் மேம்படுத்துவதற்காக சேலம் மாவட்டத்தில் ரூ850 கோடி செலவு 119 ஏக்கர் நிலப்பரப்பில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்

Updated On: 21 March 2023 6:02 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
 2. தேனி
  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
 3. தேனி
  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
 4. தேனி
  தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
 5. கோவை மாநகர்
  ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
 6. இந்தியா
  மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
 7. இந்தியா
  வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
 8. குமாரபாளையம்
  விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
 10. உலகம்
  Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...