விருதுநகரில் பத்திரிகையாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம்

விருதுநகரில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம்.
பத்திரிகையாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் விருதுநகரில் இன்று நடைபெற்றது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் விருதுநகரில் செய்தியாளர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் திரு மா.அண்ணாதுரை, தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு ராஜேந்திரன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.
இக்கருத்தரங்கில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் திரு ஆர். பாண்டிச் செல்வன் கலந்து கொண்டு மத்திய அரசின் வங்கிக்கடன் திட்டங்கள் குறிப்பாக சாலையோர வியாபாரிகள் நிதி உதவி திட்டம் குறித்தும், விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு குறித்தும் எடுத்துரைத்தார்.
மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குநர் திரு தேவராஜ் பழனிச்சாமி வனத்தையும், வனவிலங்குகளையும் காப்பதில் உள்ள செயல்பாடுகளை விளக்கியதுடன், இதில் பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து மாவட்ட தொழில் மைய இளநிலை பொறியாளர் திரு சேதுராமன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி கலந்து கொண்டு தங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
கருத்தரங்கில் தலைமையுரையாற்றிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் திரு அண்ணாதுரை, பெருகிவரும் அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு தகுந்தவாறு பத்திரிக்கையாளர்கள் தங்களை புத்தாக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றும், எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் உண்மைத் தன்மை மட்டுமே மக்கள் மனதில் நிற்கும், மற்றவை எல்லாம் தற்காலிகமே என்றும் கூறினார். சாதாரண மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் பத்திரிக்கையாளர்களைக் கேட்பார்கள், எனவே பத்திரிக்கையாளர்கள் அரசுகளின் திட்டங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றும், மிக எளிமையான திட்டங்களான விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதில் பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கருத்தரங்கின் நிறைவில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலக துணை இயக்குநர் திருமதி ஜெ. விஜயலட்சுமி, ஆர்என்ஐ குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம்
இந்தியாவின் பத்திரிக்கைத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கதைசொல்லும் வடிவங்கள் வேகமாக மாறி வருகின்றன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப பத்திரிகையாளர்களைத் தயார்படுத்துவதற்காக புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
முகாமின் நோக்கம்
இந்தப் பயிற்சி முகாம் தரவுகளைக் கையாளுதல், செயற்கை நுண்ணறிவு கருவிகள், பார்வையாளர்களை ஈடுபடுத்துதல் மற்றும் புதிய கதை வடிவங்கள் போன்ற முக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்தி, புதுமையான பத்திரிகை நடைமுறைகள் குறித்த பயிற்சி அளிக்கிறது.
முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு
இந்த முகாமில் பத்திரிக்கைத் துறையில் முன்னணி நிபுணர்கள் மற்றும் புதுமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும், நுண்ணறிவையும் பகிர்ந்து கொள்வார்கள். பங்கேற்பாளர்கள் நவீன கருவிகள் மற்றும் நுட்பங்களைப் பற்றி நேரடிப் பயிற்சியையும் பெற வாய்ப்புள்ளது.
பத்திரிக்கையின் எதிர்காலம்
இதுபோன்ற பயிற்சி முகாம்கள், தரமான செய்தி வழங்குதலில் தொழில்நுட்பப் புத்தாக்கங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. இந்திய பத்திரிக்கைத் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கு, தொடர்ச்சியான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை அவசியம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu