பீடி, சினிமா, சுண்ணாம்புக்கல், சுரங்க தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அதிகரிப்பு
2022-2023 கல்வியாண்டில் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கல்வி பயிலவுள்ள பீடி, சினிமா, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலோ மைட் சுரங்கத் தொழிலில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வீதம் திருத்தி அமைத்து, மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உடை மற்றும் புத்தகச் செலவுக்காக ரூ.1,000-யும், ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.1,500-யும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2,000-யும், பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.3,000-யும் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. அதேப்போல் ஐடிஐ, பாலிடெக்னிக், பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.6,000-யும் அளிக்கப்படவுள்ளது. பொறியியல், மருத்துவம், எம்பிஏ மாணவர்களுக்கு ரூ.25,000-யும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் தொழிலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் அருண்குமார் வெளியிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu