தக்காளி வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.60க்கு விற்பனை

தக்காளி வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.60க்கு விற்பனை
X

பைல் படம்.

tomato price in india per kg -கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக இன்று கிலோ 60 க்கும், சில்லரை விற்பனையில் ரூ.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

tomato price in india per kg -கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக இன்று கிலோ 60 க்கும், சில்லரை விற்பனையில் ரூ.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் விளைச்சல் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வரத்து தடைபட்டதால் தக்காளி விலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அசுர வேகத்தில் உயர்ந்தது. மேலும் தமிழகத்திலும் ரூ.200ஐ தாண்டி தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாட்டின் தலைநகரான டெல்லியில் தக்காளி விலை கிலோ கிட்டத்தட்ட ரூ.300-ஐ தொட்டது. இதனால் இல்லத்தரசிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

tomato price in india

ஆசியாவின் மிகப்பெரிய மொத்த பழங்கள் மற்றும் காய்கறி சந்தையான ஆசாத்பூர் மண்டியில் தக்காளியின் மொத்த விலை கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோவுக்கு ரூ.170 முதல் ரூ.220 ஆக இருந்தது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலும் வடமாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக தக்காளியின் வரத்து முற்றிலுமாக குறைந்தது. இதன் எதிரொலியாக கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை நாளுக்கு நாள் புது உச்சத்தை தொட்டு வந்தது. சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் வரத்து குறைவால் விலை அதிகரித்தது. இதனால் பொது மக்கள் மிகுந்த அவதிக்குளாகினர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளதால், விலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று மொத்த விற்பனையில் கிலோ 60 க்கும், சில்லரை விற்பனையில் ரூ.70க்கும், குறைந்தபட்சமாக ரூ.20 வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 700 டன் வந்த நிலையில் இன்று 50 டன் அதிகரித்து 750 டன்னாக வரத்து உள்ளது.

மேலும் அதிரடியாக விலை குறையும் வாய்ப்பு உள்ளது. இதர அனைத்து அத்தியாவசிய காய்கறிகளும் சுமார் 6,500 டன் அளவு உள்ளதாக கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் நல சங்க தலைவர் எஸ் எஸ் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். தக்காளி கடந்த 11 நாட்களில் 1 கிலோவுக்கு ரூ.130 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!