புயலால் சேதமடைந்த வாகனங்களுக்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு

புயலால் சேதமடைந்த வாகனங்களுக்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு
X

பைல் படம்

புயலால் சேதமடைந்த வாகனங்களுக்கான காப்பீட்டுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த மோட்டார் வாகனங்களுக்கான காப்பீட்டு தொகையினை காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் உயர்த்தியுள்ளது.

கடந்த 2ம் தேதி வங்கக் கடலில் உருவாகிய மிக்ஜம் புயலால் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசத்தின் கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. மழை வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருள்கள் என அனைத்தும் சேதமடைந்தன.

இவற்றுக்கான நஷ்டத்தை காப்பீட்டில் இருந்து பெற ஏராளமான உரிமையாளர்கள் காப்பீட்டு நிறுவனங்களை அணுகினர். மேலும், சேதமடைந்த வாகனங்களுக்கான காப்பீட்டு தொகையினை மக்களுக்கு துரிதமாக வழங்கிட காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கான நடவடிக்கை எளிதாக்கப்பட்டுள்ளதாக காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், மோட்டார் காப்பீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வரம்பை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி உள்ளதாகவும், பொது காப்பீட்டிற்கான தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளதாகவும் காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.

வெள்ள நீரால் உங்கள் வாகனம் பாதிக்கப்பட்டால் அதற்கான இன்சூரன்ஸ் எப்படி வாங்குவது என்று பார்க்கலாம்.

உங்கள் வாகனம் மழை வெள்ள நீரில் மூழ்கி விட்டாலோ அல்லது மழை நீரில் அடித்து சென்று விட்டாலோ நீங்கள் முதலில் செய்ய வேண்டியது பொறுமை காப்பது மட்டும்தான். அவசரப்பட்டு காரின் அருகே சென்று காரின் கதவை திறக்க முயற்சி செய்யாதீர்கள். காரின் கதவை திறந்தால் வெள்ள நீர் இருக்கும்போது அது முழுவதும் கார் உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. அதே நேரம் காரை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்ய வேண்டாம்.

தண்ணீர் வடிந்த பின்பு நீங்கள் உங்கள் காரை அருகில் உள்ள மெக்கானிக் அல்லது உங்கள் கார் ஷோரூம் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்வது நல்லது. ஆனால் அதற்கு முன்பாக வெள்ளநீர் எந்த அளவிற்கு உங்கள் காரில் நிரம்பி இருந்தது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் உங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். இதை மெக்கானிக் மற்றும் காப்பீடு நிறுவனத்திடம் காண்பிக்க வசதியாக இருக்கும்.

காருக்குள் வெள்ள நீர் சூழ்ந்து இருக்கும் போதே அதை புகைப்படம் எடுத்து காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்பி உங்கள் கார் இப்படியான சேதத்தை சந்தித்து விட்டது என்பதை முதல் முறையாக காப்பீடு நிறுவனத்திற்கு தெரியப்படுத்துங்கள். போன் செய்தோ, இ-மெயில் மூலமோ ஏதாவது ஒரு வகையில் காப்பீடு நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டியது உங்கள் முதல் கடமையாக இருக்கிறது.

அதன் பின்பு வெள்ளம் வடிந்த பின்பு வெள்ள நீரால் உங்கள் வாகனம் சேதம்மாகி இருந்தால் இது குறித்து நீங்கள் போலீசில் சென்று புகார் அளிக்க வேண்டும். அதன்படி போலீசார் உங்கள் புகாரை பெற்றுக் கொண்டு முதல் விசாரணை அறிக்கையை பதிவு செய்வார்கள். இதை அடிப்படையாகக் கொண்டுதான் காப்பீட்டு நிறுவனங்கள் உங்கள் காருக்கு ஏற்படும் சேதாரங்களுக்கான பணத்தை வழங்கும் இந்த எஃப்ஐஆர் என்பது முழுமையாக உங்கள் கார் சேதமானால் மட்டுமே தேவைப்படும்.

அதன் பின்பு உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் இன்சுரன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள் மேலும் காரை ஸ்டார்ட் செய்யாமல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று அங்கு காருக்கு என்ன நேர்ந்தது என முழுமையாக ஆய்வு செய்து அதை காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரியப்படுத்துங்கள்.

அதன் மூலம் அந்த காருக்கு ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய எவ்வளவு செலவாகும் என மதிப்பிடப்பட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதற்கான தொகையை உங்களுக்கு வழங்க முன் வரும். ஒருவேளை அதிகமான சேதம் ஏற்பட்டிருந்தால் முழுவதுமாக காரை ஸ்கிராப் செய்துவிட்டு, முழு இன்சூரன்ஸ் பணத்தையும் உங்களுக்கு வழங்க நிறுவனம் முடிவு செய்யலாம்.

இதற்கு காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதி நேரில் வந்து உங்கள் வாகனத்தை பார்வையிட்டு அதில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல்களை எல்லாம் சேகரித்து செல்வார். வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு செய்த பின் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் பணத்தில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் நீங்கள் அந்நிறுவனத்திடம் பேரம் பேசி அதிக தொகையை பெற முடியும். இறுதியாக நீங்கள் ஏற்றுக் கொண்ட பின்பே அந்த பணம் உங்களுக்கு வழங்கப்படும்.

குறிப்பு: எக்காரணத்தைக் கொண்டும் காரை ஸ்டார்ட் செய்யாதீர்கள். அதனால் இஞ்சின் பழுதானால் இன்சூரன்ஸ் அமௌன்ட் கிடைக்காது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!