தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பேசும் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்ட உதவி தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், திமுக ஆட்சி அமைத்த பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடி மாநிலத்திற்கு வருகை தருகிறார். பல திட்டங்களைத் துவக்கி வைக்க வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன். பல உள்கட்டமைப்பு வசதிகள். திட்டங்கள், மூன்று ரயில்வே திட்டங்களை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார். பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. சமூக நீதி மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பதிலும் நமது மாநிலம் முன்னோடியாக உள்ளது. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியையே திராவிட மாடல் என்று கூறுகிறோம்.
மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதிப்பங்கீடு காலப்போக்கில் மாறும். மத்திய அரசின் திட்டங்களில் மாநில அரசின் பங்கு அதிகம். ஒட்டுமொத்த இந்திய நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது.
இந்திக்கு இணையான தமிழ் மொழியை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியது போல 'உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்'.
எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை எட்ட, மக்கள் நலத்திட்டங்களை இணைந்து செயல்படுத்துவோம். தமிழ்நாட்டின் பங்களிப்புக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும். சாலை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு காலப்போக்கில் குறைக்கப்படுகிறது. வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி.
இந்திக்கு நிகராக அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் நிதி குறைப்பால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை ரூ. 14,000 கோடியை விரைந்து வழங்க வேண்டும். என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu