கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக தொடரும் சோதனை

கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக தொடரும் சோதனை
X

கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை 

தமிழகத்தில் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

கடந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரிதாக பேசப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தமிழகத்தில் பல இடங்களில் மீண்டும் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இடங்கள் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னை அமைந்தகரையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது.

தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள், அலுவலகம், நிறுவனத்தின் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, நாமக்கல், கோவை, ஈரோடு, உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல்லில் அரசு ஒப்பந்ததாரர், சத்தியமூர்த்தியின் வீடு மற்றும் அலுவலக இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடந்து வருகிறது. கோவை காளப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து சோதனை நடக்க வாய்ப்பு உள்ளதால் சோதனை நிறைவடைந்த பின்னரே இதுகுறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று வருமான வரி புலனாய்வு புரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!