தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சமூக ஊடக தளங்களின் துவக்கவிழா
போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.சிவசங்கர் பொது மக்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், சமூக ஊடக தளம் தொடங்கி வைத்தார்.
பயணிகள் மற்றும் பொதுமக்கள் தேவைக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு சமூக ஊடக தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.சிவசங்கர் பொது மக்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், சமூக ஊடக தளம் தொடங்கி வைத்தார்.
சமூக ஊடகங்கள் புதியவற்றை உருவாக்குவதற்கும் அவற்றை பகிர்வதற்கும் உதவுகின்றன. மேலும் புதிய புதிய தொழில்நுட்பங்கள், யோசனைகள், நலன்கள், ஆகியவற்றை பிரதிபலிக்கவும் உதவுகின்றன. ஒவ்வொருநாளும் பயணிகளை நேரில்சந்திப்பது சாத்தியமில்லை, இருப்பினும், சமூக ஊடகங்களில் ஒரு சிறு குறுஞ்செய்தி அல்லது படம்/வீடியோவை இடுவது பொதுமக்கள்/பயணிகள் ஆகியோருடன் ஆரோக்கியமான தொடர்பைப் பேணுவதற்கான ஒருவழியாகும், இது நமது தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகங்களின் சேவைகளைப்பற்றி பயணிகளுக்குத் தெரியப்படுத்த உதவுகிறது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது அரசு பொதுமக்களை உடனடியாக தொடர்பு கொள்வதற்கு, அவர்களின் கருத்துக்களை கேட்டு அதன் படி நடப்பது என குறைந்த செலவில் செய்யப்படும் ஒருவித முறையாகும், சமூக ஊடகங்கள் மூலம் பயணிகளுக்கு போக்குவரத்துக் கழகங்களிள் ஏற்கனவே உள்ள திட்டங்கள், புதிய திட்டங்கள், பிரச்சாரங்கள் மற்றும் சேவைகள் பற்றிய விழிப்புணர்வை அவ்வப்போது ஊக்குவிக்க முடியும். பயணிகள் மற்றும் பொதுமக்களின் குறிப்புரைகளுக்கு தகுந்த பதில் மற்றும் நடவடிக்கை எடுப்பது போக்குவரத்துக் கழகங்களை சீர்படுத்தவும், படம்/வீடியோவை பதிவிடுதல் மற்றும் பலவற்றின் மூலம் அவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள சமூக ஊடகங்கள் நமக்கு உதவுகின்றன.
பொதுமக்களின் கேள்விகள் மற்றும் கருத்துக்களை சேகரிப்பதன் மூலம், அதனை பகுப்பாய்வு செய்து அதற்கேற்ப செயல்பட முடியும், இது போக்குவரத்துக் கழகங்கள் மீது பயணிகளிடம் நம்பிக்கையை மேலும் வளர்க்கும் மற்றும் நேர்மறையான பார்வையை உருவாக்கும். இந்த சமூக ஊடகப் பக்கங்களைப் பின் தொடர்வதன் மூலம், நமது போக்குவரத்துத் துறை மற்றும் எட்டு போக்குவரத்துக் கழகங்களைப் பற்றியும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மேலும் அறிந்து கொள்ள்லாம்.
இது அவர்களின் குறிப்பு/சந்தேகங்களுக்கு பதில் தெரிவிப்பதன் மூலமோ அல்லது படம்/வீடியோவில் குறியிடுவதன் மூலமோ அவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள உதவுகிறது.
பொதுமக்களின் நலனுக்காக சமூக ஊடக தளங்கள் "Twitter, Facebook, Youtube" ஆகியவற்றை முதற்கட்டமாக செயலகத்தில் தொடங்கிவைத்தார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேற்படி ஊடகத்தளத்தை பொதுமக்கள் மற்றும் பயணிகள் அறிந்து தங்களது குறிப்புகளை தெரிவித்து போக்குவரத்துக் கழகங்களின் சேவையை மேலும் மேம்படுத்தி பயனுற வேண்டியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu