/* */

பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர்களுக்கு மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

Dmk general body meeting, thalaivar mkstalin speechதி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர்களுக்கு மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை அறிய தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர்களுக்கு மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை
X

 Dmk general body meeting, thalaivarmkstalin speechதலைவர் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு. க.ஸ்டாலின் பேசினார்.

சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியின்றி தி.மு.க. தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் மு.க. ஸ்டாலின் பெரியார், அண்ணா, கருணாநிதி உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

மு.க. ஸ்டாலின் பேச்சு

Dmk general body meeting, thalaivarmkstalin speechஇதனை தொடர்ந்து தி.மு.க. தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை, அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் அவமானப்படுத்த பார்க்கும். சாதனைகளை சொல்ல முடியாத பா.ஜ.க. சிதைந்து போன அ.தி.மு.க. ஆகிய இந்த இரண்டு கட்சிகளும் தி.மு.க. மீது கடும் விமர்சனம் செய்கிறார்கள். மதம், ஆன்மீக உணர்வுகளை தூண்டிவிட்டு தமிழகத்தில் அரசியல் நடத்த பா.ஜ.க. பார்க்கிறது. அரசியலையும் ஆன்மிகத்தையும் எப்போதும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள் என்பதால் பா.ஜ.க. மூச்சு திணறி வருகிறது.

Dmk general body meeting, thalaivarmkstalin speechதி.மு.க. என்பது பழுத்த மரம் அல்ல. இது ஒரு கல் கோட்டை .இந்த கல் கோட்டை மீது வீசப்பட்ட கற்களை வைத்து நாம் வலுவான வளமான ஒரு ஆட்சியை நிறுவி இருக்கிறோம். இதனை தி.மு.க. வினர் புரிந்து கொள்ள வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட தி.மு.க.வின் செல்வாக்கு பொதுமக்கள் மத்தியில் இப்போது அதிகமாகி இருக்கிறது. இதுதான் எனக்கு பயத்தை கொடுக்கிறது. கழகத்தின் செல்வாக்கும் என் மீதான நம்பிக்கையும் மக்களிடையே உயர உயர இந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும், தக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் சிந்தனையாக இருக்கிறது.


சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் சொல்வதாக இளங்கோவடிகள் எழுதியிருப்பார் எது வந்தாலும் பொறுப்பேற்க வேண்டியவன் மன்னன் தான். எனவே பதவியில் துன்பமே தவிர இன்பம் இல்லை என்று கூறி இருக்கிறார் இளங்கோ அடிகள். மழையே பெய்யவில்லை என்றாலும் என்னை தான் குறை சொல்வார்கள். மழைஅதிகமாக பெய்து வெள்ளம் வந்துவிட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். பல்வேறு பக்கங்களில் இருந்தும் வரக்கூடிய பன்முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவன் நான். ஒரு பக்கம் தி.மு.க. தலைவர் இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

துன்பப்படுத்தாதீர்

Dmk general body meeting, thalaivarmkstalin speechஉரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால் மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி என்பது போல இருக்கிறது என் நிலைமை. இத்தகைய சூழ்நிலையில் இருக்கக்கூடிய என்னை மேலும் துன்பப்படுத்துவது போல மூத்த நிர்வாகிகள் அமைச்சர்கள் உருவாக்கினால் நான் என்ன செய்வது? யாரிடம் சொல்வது? நாள்தோறும் காலையில் கண்விழிக்கும்போது கழகத்தினர் யாரும் பொது பிரச்சினையை உருவாக்கி இருக்கக் கூடாது என்ற நினைப்போடுதான் கண்விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் கூட ஆக்கி விடுகிறது. உங்கள் செயல்பாடுகள் கழகத்திற்கும் உங்களுக்கும் பெருமை ஏற்படுத்துவது போல் அமைய வேண்டுமே தவிர சிறுமைப்படுத்துவதாக அமையக்கூடாது. பொது நன்மைக்காக மட்டுமல்ல உங்கள் நன்மைக்காகவும் சேர்த்து இதனை சொல்கிறேன்.

Dmk general body meeting, thalaivarmkstalin speechபொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட செயல்கள் காரணமாக தி.மு.க. பழிகளுக்கு, ஏளனத்திற்கு ஆளானது .இன்றைக்கு இருக்கிற விஞ்ஞான வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்ப உலகில் இன்றைக்கு நம் வீட்டின் படுக்கையறையை தவிர அனைத்துமே பொது இடம் ஆகி விட்டது. பிரைவேட் பிளேஸ் என்று எதுவுமே இல்லை. எல்லோருக்கும் மூன்றாவது கண்ணாக செல்போன் முளைத்துவிட்டது. நமது ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு நொடியையும் கண்ணியமாக பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய சொற்கள் மிக மிக முக்கியமானவை. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பார்கள். பொது மேடைகளில் மட்டுமல்ல அடுத்தவர்களிடம் பேசும் போது கூட எச்சரிக்கையாக பேச வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

40 தொகுதியிலும் வெற்றி

Dmk general body meeting, thalaivarmkstalin speechநாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்ற வேண்டும். ஆதலால் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விடுங்கள். தமிழகத்தில் இனி நிரந்தரமாக தி.மு.க. ஆட்சி தான் நடைபெறும். அகில இந்திய அளவில் முக்கிய சக்தியாக தி.மு.க. மாற வேண்டும். திமுக இல்லாத தமிழகத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் குறை கூறக்கூட நாம் இடம் கொடுத்து விடக்கூடாது.

கொள்கை இல்லாத அ.தி.மு.க.

Dmk general body meeting, thalaivarmkstalin speechசமூக வலைத்தளங்கள் மூலம் தி.மு.க. கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகத்தில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிற பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் வெற்றி பெற எதை வேண்டுமானாலும் செய்யும். அனைத்தையும் தி.மு.க.வினர் எதிர் கொண்டாக வேண்டும் அ.தி.மு.க.வின் கோஷ்டி பூசலை பா.ஜ.க. பயன்படுத்திக் கொள்கிறது. அ.தி.மு.க.வில் தற்போது தலைமை சரியில்லை ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. கலகலப்பு போய்விட்டது தி.மு.க.வை எதிர்ப்பதை தவிர அ.தி.மு.க.விற்கு வேறு எந்த கொள்கையும் கிடையாது. எனவே நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தக்க வைக்க வேண்டும் என்பதே என் சிந்தனை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Updated On: 11 Oct 2022 4:58 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி