வேறு வேறு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எதிர்ப்பு சக்தி குறைகிறது
கொரோனா பரவலை தடுக்கவும், உயிர் சேதத்தை தவிர்க்கவும் தடுப்பூசி மிகப்பெரிய உபயோகமாக உள்ளது. தற்போதைய சூழலில் முதலாவது தவணையிலும், 2வது தவணையிலும் ஒரே வகை தடுப்பூசியை மட்டுமே செலுத்திக்கொள்வதற்கு மட்டுமே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது கோவேக்சின் செலுத்தியவர்கள் அதே தடுபூசியையும்.கோவிஷீல்டு செலுத்தியவர்கள் அதே தடுப்பூசியை 2வது, 3வது தவணை செலுத்தி வருகின்றனர்.
முதல் தவணையில் ஒரு வகை தடுப்பூசியையும், 2வது தவணையில் மற்றொரு வகை தடுப்பூசியும் செலுத்தினால் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் அதிகமாகுமா என்பது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 200 தன்னார்வலர்களிடம் மாறி மாறி தடுப்பூசிகளை செலுத்தி ஆராய்ச்சி செய்தனர். இதில் தடுப்பூசிகளை கலப்பதால் எந்த பயனும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும் ஒரே வகையான தடுப்பூசியை செலுத்தும் போது அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. தடுப்பூசிகளை மாற்றி செலுத்தும் போது அதில் போதிய எதிர்ப்பு சக்தி கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளனர். நோய் தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டத்தில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் ஒரே வகையான தடுப்பூசி செலுத்த மட்டுமே தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu