மயில்போல பொண்ணு ஒன்னு..’ பாடலுடன் மகளுக்கு விடைகொடுத்த இளையராஜா!
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் சிகிச்சைக்காக இலங்கை சென்றிருக்கிறார்.
சிகிச்சை தொடங்கிய சில நாட்களிலேயே அவரது உயிர் பிரிந்தது குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளவே முயடிவில்லை. கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தவருக்கு புற்றுநோய் இருப்பதே தாமதமாக தெரிந்துள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை (ஜன.25) உயிரிழந்தார்.
தியாகராய நகா் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பவதாரணியின் உடல் வைக்கப்பட்டு பின், இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே இளையராஜா கட்டியுள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்துக்கு பவதாரணியின் உடல் கொண்டு வரப்பட்டு இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யும் முன்பு குடும்பத்தினர் எல்லோருக்கும் கண்ணீருடன் பாட்டு பாடி விடை கொடுத்து இருக்கின்றனர்.
"மயில் போல பொண்ணு ஒன்னு" என்ற பாடலை இறுதியாக மகளுக்காக இளையராஜா கண்ணீருடன் பாடி இருப்பது எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறது.
நல்லடக்கம் செய்வதற்கு முன், பவதாரிணி பாடிய ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலைக் குடும்பத்தினர் பாடினர். அதில், இளையராஜாவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிலர் இணைந்து பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதி படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற, ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலைப் பவதாரிணி பாடியிருந்தார். இப்பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu