முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச் சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலராக இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலர், இளம்பகவத்தை நியமித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப் பகுதிகளில் செயல்படும் 1545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்கப்பள்ளி (1 முதல் 5 வகுப்பு வரை) குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 2022-2023 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்திட ஆணை வெளியிடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu