/* */

நல்வாழ்வுக் கணக்கெடுப்புத் திட்டம்: சென்னை ஐஐடி துவக்கம்

நல்வாழ்வுக் கணக்கெடுப்புத் திட்டத்தை சென்னை ஐஐடி துவங்கியுள்ளது.

HIGHLIGHTS

நல்வாழ்வுக் கணக்கெடுப்புத் திட்டம்: சென்னை ஐஐடி துவக்கம்
X

பைல் படம்.

தமிழ்நாடு அரசின் தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் (NHM) ஆதரவுடன் இக்கல்வி நிறுவனத்தின் அனைத்து மாணவர்கள், பணியாளர்கள், ஆசிரியர்களை சென்றடையும் வகையில் சுதந்திரமான முகமை ஒன்று கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இக்கல்வி நிறுவன வளாகத்திற்குள் தொடர்புடைய அனைவரையும் சென்றடையும் வகையில் நல்வாழ்வு கணக்கெடுப்பு ஒன்றை நேற்று தொடங்கியுள்ளது.

இந்த கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைவரையும் சுதந்திரமான முகமை ஒன்று தொடர்பு கொண்டு கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ளும். தமிழ்நாடு அரசின் தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் ஆதரவுடன் இந்த கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. கணக்கெடுப்பை நடத்துவதற்காக 30-க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வின்போது, தேசிய நலவாழ்வு முகமையால் நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த நல்வாழ்வு நிபுணர் ஒருவர் தனித்தனியாக உரையாடி கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவார்.

நல்வாழ்வுத் திட்டத்தை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி தொடங்கி வைத்தார். மாணவர் ஒவ்வொருவரும் தங்கள் ஆரோக்கியத்திற்காக ஆசிரியரோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் 'குஷல் புரோகிராம்' எனப்படும் தனித்துவமான முன்முயற்சியையும் அவர் துவக்கி வைத்தார்.

இந்தப் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "மகிழ்ச்சி என்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். ஐஐடி மெட்ராஸ்-ஐப் பொருத்தவரை இந்த வளாகத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதில் இக்கல்வி நிறுவனம் உறுதியாக இருந்து வருகிறது. அதனை நோக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த சுதந்திரமான நல்வாழ்வுக் கணக்கெடுப்பு. இந்த முயற்சியில் எங்களுக்கு உதவிய தமிழ்நாடு அரசின் தேசிய சுகாதார ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.

மாணவர்களோடு தொடர்பில் இருப்பதற்காக, இக்கல்வி நிறுவனம் 'மகிழ்ச்சியாக இருங்கள்' என்ற இணையதளத்தை https://behappy.iitm.ac.in/ இணைய முகவரியில் தொடங்கியுள்ளது.

Updated On: 5 May 2023 3:08 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  2. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  4. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  5. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  6. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  7. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  8. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  9. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  10. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்