அடையாள பெற்ற செய்தியாளர்களை சட்டமன்ற கூட்டத் தொடரில் அனுமதிக்க வேண்டும்.

அடையாள பெற்ற செய்தியாளர்களை சட்டமன்ற கூட்டத் தொடரில் அனுமதிக்க வேண்டும்.
X
அமைச்சரும், இயக்குனரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

அடையாள பெற்ற செய்தியாளர்களை சட்டமன்ற கூட்டத் தொடரில் அனுமதிக்க வேண்டும் என இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் செய்தித் துறை அமைச்சரிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

தமிழகசெய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநான் அவர்களை இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் மோகன் தாரா, மாநில செயலாளர் சங்கர், மாநில இணைச் செயலாளர் ஸ்பைடர் சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் நூதன் பிரசாத் ஆகியோர் தலைமை செயலகத்தில் இன்று சந்தித்து பேசினர்.

அப்போது சட்டமன்ற கூட்டத் தொடரில் குறைந்த எண்ணிக்கையில், குறிப்பிட்ட சில நிருபர்களை துறையின் ஒருசிலரின் விருப்பத்திற்கேற்ப சபையில் அனுமதிப்பதால் சில செய்தியாளர்கள் செய்தி எடுக்க முடியாமல் தவித்து வருவது குறித்தும், கடந்த காலத்தில் பத்திரிகையாளர்களிடையே பாகுபாடு பார்த்த காரணத்தால் சில பத்திரிகையாளர்கள் பாதிப்புக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்த பாகுபாடு அகற்றப்பட்டு அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் அரசு அங்கீகார அடையாள பெற்ற செய்தியாளர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேலும் செய்தித் துறை இயக்குனரை நேரில் சந்தித்து பத்திரிகையாளர்களின் அவல நிலை குறித்து தெரிவிக்கப்பட்டது. அமைச்சரும், இயக்குனரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself