ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: ஊரகவளர்ச்சித்துறைக்கு அமுதா ஐஏஎஸ்
அமுதா ஐஏஎஸ்
தமிழக ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், மேலும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் பணியில் இருந்த அமுதா ஐஏஸ் அண்மையில் மாநில பணிக்கு திரும்பிய நிலையில், அவர் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், தொழிற்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை அந்த பதவியில் முருகானந்தம், நிதித்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துறை முதன்மை செயலராக கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் பதவி, சந்தீப் சக்சேனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலராக தயானந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். தர்மேந்திர பிரதாப் யாதவ் , கைத்தறி மற்றும் துணி நூல், கதர் துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், எரிசக்தி துறை முதன்மை செயலராக ரமேஷ் சந்த் மீனாவும், விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலராக, அபூர்வாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நில சீர்திருத்தத் துறை செயலராக பீலா ராஜேஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu