தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாறுதல்
X
பைல் படம்
By - C.Vaidyanathan, Sub Editor |14 Dec 2023 7:33 PM IST
பல மாவட்டங்களில் துணை ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
- செங்கல்பட்டு துணை ஆட்சியராக வி.எஸ். நாராயண சர்மாவும்
- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் துணை ஆட்சியராக திவ்யன்ஷூ நிகமும்
- சேலம், மேட்டூர் துணை ஆட்சியராக பொன்மேனியும்
- கோவை பொள்ளாச்சி துணை ஆட்சியராக கேத்தரின் சரண்யாவும்
- கிருஷ்ணகிரி ஓசூர் துணை ஆட்சியராக பிரியங்காவும்
- நாகப்பட்டினம் துணை ஆட்சியராக குணால் யாதவும்
- திருவள்ளூர் பொன்னேரி துணை ஆட்சியராக வாஹே சன்கேட்டும்
- திருநெல்வேலி சேரன்மாதேவி துணை ஆட்சியராக ஆர்பித் ஜெயினும்
- ராமநாதபுரம் பரமக்குடி துணை ஆட்சியராக அபிலாஷா கவுரும்
- திருவண்ணாமலை செய்யாறு துணை ஆட்சியராக பல்லவி வர்மாவும்
- பெரம்பலூர் துணை ஆட்சியராக கோகுலும்
- கடலூர் சிதம்பரம் துணை ஆட்சியராக ராஷ்மி ராணியும்
- திருப்பூர் துணை ஆட்சியராக சவுமியா ஆனந்தும்
- தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநராக ஐஸ்வர்யாவும்
- செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குநராக ஆனாமிகாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
11 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் பணியாற்றும் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி,
- கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமய் சிங் மீனா
- திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரதீப்
- திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளராகஇருந்த பாஸ்கரன், சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனராக நியமனம்
- சிறைத்துறை கூடுதல் டிஜிபி., மகேஸ்வர் தயாள்
- டி.என்.பி.எல் நிறுவன தலைமை ஊழல் கண்காணிப்பு அலுவலராக அமரேஷ் புஜாரி
- சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு காவல் இணை ஆணையராக தர்மராஜன்
- மதுரை தெற்கு போலீஸ் துணை தர்மராஜன் பாலாஜி
- கூடுதல் டிஜிபி கல்பனா நாயக், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராக நியமனம்
- டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு ஐ.ஜி.,யாக பிரமோத் குமார்
- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாக தமிழ்சந்திரன்
- கோவை மண்டல குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு சி.ஐ.டி பிரிவு காவல் கண்காணிப்பாளராக சந்திரசேகரன்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu