குழந்தைகளின் மொபைல் போன்களை ரகசியமாக கண்காணிப்பது எப்படி? சாவி பெற்றோர் கையில்..
கடந்த 1ம் தேதி, கன்னியாகுமரி அருகே பெயிண்டிங் வேலை செய்து வரும் அஜின் (20), தனது தொலைபேசியில் பேரையில் உள்ள உறவினருக்கு தொடர்பு கொண்டு பேச முயன்றபோது, ஒரு எண் தவறுதலாக அதே பகுதியை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவிக்கு சென்றுள்ளது. அந்த மாணவி ''ராங்க் நம்பர்'' எனக் கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அஜித், அந்த மாணவிக்கு மீண்டும் மீண்டும் தொடர்புகொண்டு அவரை மயக்கி காதல் வசப்படுத்தியுள்ளார். பின்னர் அஜின் மாணவியை வீட்டில் இருந்து கடத்தி சென்று நாகப்பட்டினத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
ஆனால், மாணவியின் பெற்றோர் மகளைத் தேடி பல இடங்களில் அலைந்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார், நாகப்பட்டினம் விரைந்து சென்று இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து மார்த்தாண்டம் மகளிர் காவல்நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் மாணவியை கடத்தி சென்று குடும்பம் நடத்திய குற்றத்திற்காக அஜின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலைக்கு பள்ளி மாணவி தள்ளப்பட்டதற்கான காரணம் ஒரு தவறுதலான அழைப்பும், பெற்றோர்கள் மாணவி எங்கு பேசுகிறார் என்பதை அறியாமல் இருந்ததும் தான் என்று சொல்ல முடியும். அதேபோன்று பள்ளிக் குழந்தைகளிடம் மொபைல் போன்களை வைத்திருக்க பெற்றோர் அனுமதிப்பதும் அவர்கள் முன்பின் தெரியாதவர்களிடம் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அவ்வப்போது பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் அரசு சார்பிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தியும் உள்ளளது. அப்படி இருந்தும், பருவ வயதின் காரணமாக பிள்ளைகள் தங்களை அறியாமல் தவறான பாதையில் செல்வது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
எனவே இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க குழந்தைகளையும், பள்ளி மாணவிகளையும் தங்களது பெற்றோர்கள் கண்காணிக்கவும், அவர்களது மொபைல் போன்களை நிர்வகிக்கவும் தற்போது ஏராளமான செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளன.
இந்த மொபைல் செயலிகளால், தங்களுடைய பெண் குழந்தைகள் மட்டுமல்லாமல், ஆண் குழந்தைகளையும் தவறான பாதையில் கொண்டுசெல்லமால் தவிர்க்க பெற்றோருக்கு வழிகாட்டுதலாகவும், அவர்களது கையில் கட்டுப்பாடு மற்றும் நோட்டமிடுதல் போன்றவற்றை ரகசியமாக கையாள முடியும்.
இதற்காக Google Family Link, FamiSafe போன்ற ஏராளமான மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
உதாரணத்திற்காக FamiSafe பற்றி பார்ப்போம்:
இந்த லிங்கை பயன்படுத்தி https://play.google.com/store/apps/details?id=com.wondershare.famisafe கூகுள் பிளே ஸ்டோரில் FamiSafe ஆப்பை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர் உங்களுடைய இமெயில் ஐடி.,யை பயன்படுத்தி பதிவு செய்து கடவுச்சொல்லை உருவாக்கி உள்நுழைய வேண்டும்.
இதனையடுத்து வரும் பக்கத்தில் யார் உபயோகிப்பாளர் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
உங்களுடைய குழந்தைகளின் மொபைல் போனில் குறிப்பிட்டுள்ள செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
பின்னர் வரும் pairing Code-ஐ குழந்தைகளின் மொபைல் போனில் உள்ள செயலியில் இணைக்க வேண்டும்.
அடுத்து உங்களுடைய குழந்தைகளின் மொபைலின் அனைத்துவிதமான செயல்களையும் கண்காணிக்க ஏதுவான பக்கம் உருவாகிவிடும். அதில் சமூக வலைதளங்கள், எவ்வளவு நேரம் செயல்படுத்தியுள்ளார், எந்த இடத்தில் உள்ளார், யாரிடம் போனில் பேசியுள்ளார் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த செயலியில் பெறலாம்.
Famisafe app முழுவிபர வீடியோ லிங்க்: https://youtu.be/Uy9xirO0Wl4
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu