ரூ.50க்கு மழையில் சேதமாகாத 'பாக்கெட் ஆதார் கார்டு' பெறுவது எப்படி? ஒருவாரத்தில்...

மழைக்காலத்தில் ஆதார் கார்டு சேதமாகாத வகையில் 'பிவிசி ஆதார் கார்டு' ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் ஆதார் கார்டு, இன்று அனைத்து அரசு சம்பந்தமான மற்றும் அரசு சாரா சேவைகளை பெறுவதற்கும் ஆதார் கார்டு அவசியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. இது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் அனைத்துவிதமான சேவைகளையும் நவீன தொழில்நுட்பத்தினை புகுத்தி வருகிறது. அதன்படி தற்போது ஆதார் கார்டுகளிலும் பல்வேறு நவீன நுட்பங்களை செய்து வருகிறது.

ஆதார் கார்டு வேண்டி பதிவு செய்யும் பயனாளர்களுக்கு 'லெட்டர்' வடிவிலான அட்டையை வழங்கி வருகிறது. மேலும் ஆன்லைன் மூலமும் டவுன்லோடு செய்துகொள்ளும் வசதியும் ஆதார் ஆணையம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், தற்போது நவீன தொழில்நுட்பமாக மழையில் சேதமாகாத, பாக்கெட்டுகளில் வைக்கும் அளவிற்கு பிவிசி ஆதார் கார்டு பெறும் சேவையையும் ஆதார் ஆணையம் செய்து வருகிறது.

இதனை பெற ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த ஒருவாரத்தில் துரித தபால் சேவை (Speed Post) மூலம் உங்கள் கைகளில் கிடைத்துவிடும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? என்று தற்போது பா்ர்ப்போம்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) -வின் பிரத்யேக இணையதளமான https://uidai.gov.in/ என்ற முகவரிக்குள் சென்று 'MyAadhaar' காலத்தில் 'Order Aadhaar PVC Card' கிளிக் செய்ய வேண்டும்.


இதனையடுத்து தனி Tab-ஆக open ஆகும் பக்கத்தில் செல்போன் எண்ணின் 'OTP' மூலம் 'login' செய்துகொள்ளவேண்டும்.


பின்னர் 'Order Aadhaar PVC Card' கிளிக் செய்தபின், 12 இலக்க உங்கள் ஆதார் எண் மற்றும் அதிலிருக்கும் 'செக்யூரட்டி கோட்'உள்ளீடு செய்து 'Terms and conditions' கிளிக்செய்து 'summit' கொடுக்க வேண்டும்.




இதனைத்தொடர்ந்து 'Payment option'-ல் டெபிட் கார்டு அல்லது பிற முறைகளிலோ உங்களது ரூ.50க்கான பணப்பரிவர்தனை செய்ய வேண்டும்.

பின்னர் உங்களுகான விண்ணப்பம் பூர்த்தி அடைந்து உங்களுக்கு பிவிசி ஆதார் கார்டு அனுப்ப தயாரான குறுஞ்செய்தி உங்களுக்கு கிடைக்கும். இந்த பிவிசி ஆதார் கார்டு ஒருவாரத்தில் உங்கள் கைகளில் கிடைத்துவிடும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!