உங்கள் பான் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி?

உங்கள் பான் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி?
X
உங்களுடைய பான் கார்டில் புகைப்படத்தை மாற்றுவது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

பான் கார்டு வருமான வரித் துறையால் வழங்கப்படுகிறது. பான் கார்டு என்பது ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையிலும் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், வங்கியில் கணக்கு தொடங்கவும், அதிகப்படியான தொகையை எடுக்கவும், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பெறவும் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. பான் கார்டு 10 இலக்க ஆல்பா எண்களைக் கொண்டுள்ளது.

இந்த பான் கார்டு வழங்கப்படும் போது மோசமான புகைப்படம் இருந்தாலோ அல்லது உங்கள் முகம் சற்று வித்தியாசமாக இருந்தாலோ, உங்கள் புகைப்படத்தை பான் கார்டில் மாற்ற விரும்பினால், இந்த செயல்முறையின் மூலம் அதைச் செய்யலாம். இந்த ஆவணத்தில் புகைப்படம் மற்றும் கையொப்பம் கட்டாயம். பான் கார்டில் புகைப்படத்தை எவ்வாறு புதுப்பிக்கலாம் என்பதை பார்ப்போம்.

PAN Card- உங்கள் புகைப்படத்தை மாற்றுவது எப்படி?

  1. முதலில் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் (NDLS) அதிகாரப்பூர்வ இணையதளமான www.onlineservices.nsdl.com என்ற முகவரிக்குச் செல்லவும். .
  2. இங்கே நீங்கள் 'Apply Online' அல்லது 'Registered User'.என்ற இரண்டு விருப்பங்களைக் காண்பீர்கள்.
  3. அதில் இருந்து புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க அல்லது ஏற்கனவே உள்ள பான் கார்டில் மாற்றங்களைச் செய்வதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  4. இப்போது மாற்றத்திற்கு 'Correction in existing PAN' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. அதன் பிறகு category type தேர்ந்தெடுக்கவும், அதில் நீங்கள் individual option தேர்வு செய்யலாம்.
  6. இங்கே நீங்கள் கீழே கேட்கப்பட்ட முழு விவரங்களையும் கொடுக்க வேண்டும், பின்னர் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
  7. இப்போது நீங்கள் KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
  8. இப்போது இங்கே நீங்கள் 2 விருப்பங்களைக் காண்பீர்கள், அதில் இருந்து
    photo
    மற்றும் signature பொருந்தாதவற்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
  9. உங்கள் பெற்றோரின் முழு விவரங்களையும் கொடுத்து, அடுத்த பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  10. அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, பயனர்கள் அடையாளச் சான்று உள்ளிட்ட பிற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  11. இப்போது declaration டிக் செய்து பின்னர் படிவத்தை submit சமர்ப்பிக்கவும்.
  12. படிவத்தின் நகலை வருமான வரி பான் சேவை பிரிவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Tags

Next Story