தமிழக கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

தமிழக கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
X

மாதிரி படம் 

இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் தமிழக கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் நேற்று பேருந்தில் சென்று கொண்டிருந்த கைதிகள் 58 பேர் தப்பி ஓடினர். அங்கு நிலவும் அசாதாரண சூழலால், அகதிகளுடன் சேர்ந்து கைதிகள் கடல் வழியாக இந்தியாவுக்கு ஊடுருவ வாய்ப்புள்ளதாலும், தேச விரோத கும்பல்களும் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது என்பதாலும் தமிழக கடலோர பகுதிகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்குமாறு மாநில காவல்துறைக்கு மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய உள்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கடலோர பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!