TNPSC குரூப்-2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

TNPSC குரூப்-2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
X
குரூப்-2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - || (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி - || மற்றும் தொகுதி IIA) பதவிக்கான முதல் நிலைத் தேர்வு வரும் 21ம் தேதி முற்பகலில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai based agriculture in india