Holiday for Schools Colleges-சென்னை உள்ளிட்ட4 மாவட்டங்கள், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 4ம் தேதி விடுமுறை

Holiday for Schools Colleges-சென்னை உள்ளிட்ட4 மாவட்டங்கள், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 4ம் தேதி விடுமுறை
X

Holiday for Schools Colleges- கனமழை காரணமாக, பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 4ம் தேதி விடுமுறை அறிவிப்பு ( கோப்பு படம்)

Holiday for Schools Colleges- கனமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Holiday for Schools Colleges, 4 Districts, Puducherry- தமிழகத்தில் வரும் 4-ம் தேதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நாளை மறுநாள் புயலாக மாறி டிசம்பர் 5-ம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மிக்ஜம் புயல் டிச.5-ம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என்றும், தற்பொழுது சென்னையிலிருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும், நாளை மறுநாள் இந்திய வானிலை ஆய்வுமையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்திருப்பதாலும் மாணவர்களின் நலன் கருதி 04.12.2023 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது

தற்போது, மாணவர்களின் நலன் கருதி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

புதுச்சேரியிலும் விடுமுறை அறிவிப்பு

புயல் எச்சரிக்கை காரணமாக புதுவையில் வரும் 4 -ம் தேதி பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை, காரைக்கால், ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிச. 4 ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது புதுச்சேரி அரசு.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் டிசம்பர் 3-ம் தேதி புயலாக மாறும் என்றும் அது திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாயன்று காலை தெற்கு ஆந்திரம் - வடதமிழகத்திற்கு இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, வரும் 4 -ம் தேதி புதுவைக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், முன்னெச்சரிக்கையாக டிசம்பர் 4-ம் தேதி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!