கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிக்கு விடுமுறை?

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிக்கு விடுமுறை?
X
Heavy Rain News -கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Heavy Rain News -தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை , திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!