இந்துக்கள் கடும் கொந்தளிப்பு: காளி போஸ்டர் டுவிட்டரில் அதிரடி நீக்கம்..!
சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு கையில் ஓரினச்சேர்க்கையாளர் கொடியை ஏந்தியபடியே, மறு கையால் சிகரெட் பிடிக்கும் காளி அம்மன் போஸ்டர்.
தமிழகத்தில் மதுரையை சேர்ந்தவர். கவிஞர். ஆவணப்பட பெண் இயக்குனர் லீனா மணிமேகலை. கனடா வாழ் தமிழரான இவர் காளி என்னும் படத்தை இயக்கி, நடித்து தயாரித்திருந்தார். உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் காளி போஸ்டரை பார்த்து கொந்தளித்தனர். கண்டனக்குரல்களை எழுப்பி வருகின்றனர்.
கனடாவில் நடைபெற்ற 'அண்டர் தி டெண்ட்' என்ற திட்டத்தின் கீழ் இப்படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது. இந்த போஸ்டர் டிவிட்டரில் டிரெண்டானது. அதில் 'காளி' வேடம் அணிந்த பெண், புகைப்பிடித்து கொண்டு, ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை கையில் பிடித்திருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக லீனா மணிமேகலை மீது டெல்லி, உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். என்றாலும் எதிர்ப்பை கண்டு அஞ்சாத லீனா மணிமேகலை, இதனை கண்டு தான் அஞ்சவில்லை என்றும், பிரச்னைகளை எதிர்கொள்ளப்போவதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், எதிர்ப்பு காரணமாக காளி போஸ்டர் பதிவை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. இது மட்டுமின்றி, கனடா நாட்டின் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், வருத்தம் தெரிவித்திருக்கும் ஆகா கான் அருங்காட்சியகம், காளி ஆவணப் படத்தை திரையிடுவதையும் நிறுத்தி வைத்து உள்ளது. இது ஒருவகையில், ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை முயற்சிக்கும், போராட்டத்துக்கும் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu